'கட்டணக் கொள்ளை': ஒய் ஜி மகேந்திரன் மகள் நடத்தும் பள்ளி மீது வழக்கு!

By Sudha

Y Gee Mahendra, with Wife and Daughter
நாடக நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி நடத்தும் காலிபர் அகாடமி எனும் பள்ளியில் மிக அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 பெற்றோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மேலும் பள்ளிக் கல்வித் துறை அனுமதி பெறாமல் இந்தப் பள்ளி நடத்தப்படுவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனமாகத் திகழும் பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் துணை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது காலிபர் அகாடமி. இந்தப் பள்ளியை மதுவந்தி அருண் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார்.

இதில் மாணவர் சேர்க்கையின் போது குறிப்பிடப்பட்டதை விட மிக அதிக அளவு கட்டணம் கேட்டு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காலிபர் அகாடமியில் படிக்கும் மாணவர்களின் 27 பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். காலிபர் அகாடமி பள்ளிக் கல்வித் துறையின் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் மதுவந்தி அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X