காட்டுக்குள் ஹாலிவுட் மிரட்டல்.. ஆறு நிமிட அதிரடி சேஸிங் காட்சிக்கு ரூ.6 கோடி செலவு பண்றாங்களாமே!

By

சென்னை: ஆறு நிமிட சேஸிங் காட்சிக்காக, ரூ.6 கோடியை படக்குழு செலவழிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரகனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பொம்மா

பொம்மா

த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இதில் இடம்பெற்றுள்ள, புட்ட பொம்மா என்ற பாடல் யுடியூப்பில் 151 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. லாக்டவுனுக்குப் பிறகும் இந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

இந்தப் படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அல்லு அர்ஜூன் லுக், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

டிவிட்டர் சாதனை

டிவிட்டர் சாதனை

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், வெளியான 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்துக்கு அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இந்தப் படம், செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. இதன் ஷூட்டிங் முழுவதும் நல்லம்மா ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது.

சேஸிங் காட்சி

சேஸிங் காட்சி

இதன் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்புக்குள்ள இந்தப் படம் பற்றி தினமும் ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்தப் படத்தின் 6 நிமிட சேஸிங் காட்சிக்காக படக்குழு 6 கோடி ரூபாயை செலவழிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பீட்டர் ஹெய்ன்

பீட்டர் ஹெய்ன்

காட்டுக்குள் எடுக்கப்படும் இந்த சேஸிங் காட்சியை, இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்க உள்ளனர். ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்ஸ், சில ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்களுடன் இணைந்து இந்தக் காட்சியை அமைக்க உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X