சத்யராஜிடம் ஆசி வாங்கினார் திமுக வேட்பாளர் ஜின்னா

ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அசன் முகமது ஜின்னா இன்று 112வது வட்டத்தில் வாக்கு சேகரித்தார். தி.மு.க நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க , விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஜின்னாவை ஆதரித்து வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ-மாணவியர், இளைஞர்கள் உள்ளிட்டோர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஜின்னா, தனது தொகுதியின் வாக்காளரான நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி ஆதரவு கேட்டார். ஜின்னாவுக்கு சத்யராஜ் வாழ்த்துகள் தெரிவித்தார்.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தையும் முதல் ஆளாக ஜின்னாதான் சந்தித்து ஆசி பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சந்தித்தார். வரிசையாக பலரும் ரஜினியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











