7 மாசம்.. தினமும் 6 மணி நேரம்.. ஆர்யாவின் முரட்டுத் தனமான சிக்ஸ்பேக்கு பின்னாடி இவ்ளோ உழைப்பா?
Recommended Video
சென்னை: ஆர்யா வைத்திருக்கும் முரட்டுத் தனமான சிக்ஸ் பேக் தான் தற்போது, கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
ஏற்கனவே, மதராசபட்டினம் மற்றும் கடம்பன் படத்துக்கு, சிக்ஸ் பேக் வைத்து நடித்தாலும், இந்த அளவுக்கு காட்டுத்தனமாக உடம்பை ஆர்யா கொண்டு வரவில்லை.
பா. ரஞ்சித் இயக்கத்தில், பாக்ஸிங் கதையை மையப்படுத்தி உருவாகும் தனது 30வது படத்துக்காகத்தான் இந்த கெட்டப் என்று அறிவித்துள்ளார் ஆர்யா.

பாக்ஸர்
கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித், தற்போது, ஆர்யா நடிப்பில் மீண்டும் நார்த் மெட்ராஸ் கதையை படமாக்கி வருகிறார். வடசென்னையை சேர்ந்த பாக்ஸர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ஆர்யாவின் 30வது படத்துக்காகத்தான் இப்படி ஒரு சிக்ஸ் பேக்கை வைத்துள்ளார்.
பேக் போஸ்
முதலில், ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த பின் பக்க போஸை பார்த்த ரசிகர்கள், இது ஆர்யாவாக இருக்காது, யாரு சார் இது, என கலாய்த்து கேள்வி எழுப்பினர். மேலும், பலர், ஆர்யாவின் முரட்டுத்தனமான பேக் போஸை பார்த்து, வாயடைத்து போயினர்.
முரட்டுத்தனமான முன் பக்கம்
ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட முரட்டுத்தனமான முன் பக்க சிக்ஸ் பேக்கை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியில் வாயடைத்து போனார்கள். இப்படி ஒரு சிக்ஸ் பேக் மற்றும் பாடி பில்டிங் உடம்பை ஆர்யா எப்படி சாத்தியம் ஆக்கினார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

7 மாசம் ஒர்க்கவுட்
இப்படியொரு காட்டுத்தனமான உடம்பை கொண்டு வர நடிகர் ஆர்யா, கடந்த 7 மாதங்களாக, தினமும் ஆறு மணி நேரம் கடின ஒர்க்கவுட் செய்து, இந்த கட்டுமஸ்த்தான சிக்ஸ்பேக் உடம்பை பெற்றுள்ளார். மேலும், முறையான டயட், கார்டியோ மற்றும் பாக்ஸிங் என ஆறு மணி நேரத்தை பிரித்து செய்துள்ளார்.

பாக்ஸிங் பயிற்சி
பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் நார்த் மெட்ராஸ் பாக்ஸர்கள் குறித்த கதை. இந்த படத்திற்காக ரியல் பாக்ஸராக உருவாக வேண்டும் என்பதற்காக தினமும் 2 மணி நேரம் பாக்ஸிங் பயிற்சி செய்துள்ளார் நடிகர் ஆர்யா. அவருக்கு, நார்த் மெட்ராஸ் பாக்ஸர்கள் மற்றும், அவரது ஜிம் டிரையினர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
சல்பேட்டா
ஆர்யாவின் 30வது படத்திற்கு சல்பேட்டா பரம்பரை என்றும் சல்பேட்டா என்றும் டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பை ஆர்யா நேற்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை மட்டுமே வெளியிட்டு இருந்தார்.

50 சதவீதம் எடுத்தாச்சு
ஆர்யாவின் 30வது படத்திற்கான ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை 50 சதவீதம் போர்ஷன் எடுத்தாச்சு என்றும், மீதி 50 சதவீதம் போர்ஷனில் தான் இப்படியொரு முரட்டுத் தனமான உடம்புடன் ஆர்யா வரப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூலோகம்
வடசென்னையை சுற்றி ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன. வடசென்னையில், பாக்ஸிங் பற்றிய கதையையும், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் என்ற படத்தை எடுத்துள்ளனர். பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா ஹீரோவாகவும், மகிழ் திருமேனி வில்லனாகவும் நடித்து வரும் இந்த படம் பீரியட் படமாக உருவாகி பூலோகம் படத்தில் இருந்து வேறுபடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











