twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மொழிகள்.. 232 படங்கள்.. 4 தேசிய விருதுகள்.. கலையின் நாயகன் கமல்ஹாசனின் 63 ஆண்டுகால திரைப்பயணம்!

    |

    சென்னை: களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து விக்ரம் வரை 232 படங்களில் நடித்துள்ள நடிகர் கமல் கிட்டத்தட்ட 6 இந்திய மொழிகளில் நடித்து அசத்தி உள்ளார்.

    கமல் 50, கமல் 60 என சமீபத்தில் கமல்ஹாசனின் திரை பயணத்தை தமிழ் திரையுலகமே பிரம்மாண்டமாக கொண்டாடியது.

    இந்நிலையில், திரையுலகில் அறிமுகமாகி 63வது ஆண்டை கமல் செய்துள்ளார் என்பதை #63YearsOfKamalism என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    6 நாளில் 50 கோடியை நோக்கி நகரும் சீதா ராமம்.. கலெக்ஷன்ஸ் சும்மா மிரட்டுதே! 6 நாளில் 50 கோடியை நோக்கி நகரும் சீதா ராமம்.. கலெக்ஷன்ஸ் சும்மா மிரட்டுதே!

    6 மொழிகள்

    6 மொழிகள்

    1960ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் படத்தில் அறிமுகமானவர் கமல்ஹாசன். 1962ம் ஆண்டு கண்ணும் கரலும் எனும் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1976ம் ஆண்டு அந்துலேனி கதா எனும் தெலுங்கு படத்தில் அப்பவே ரோலக்ஸ் போல கேமியோவில் நடித்துள்ளார். 1977ல் வங்காள மொழியில் வெளியான கபிதா படத்திலும் கமல் நடித்துள்ளார். 1978ல் தப்பிட தலா எனும் கன்னட படத்தில் நடித்து சாண்டில்வுட்டிலும் அடியெடுத்து வைத்தார். 1981ல் ஏக்துஜே கேலியே இந்தி படத்தில் நடித்து ஹிஸ்டரி படைத்தார். இப்படி 6 மொழிகளில் மட்டுமின்றி பேசும் படத்தின் மூலமாக மெளன மொழியில் நடித்தவர் கமல்.

    232 படங்கள்

    232 படங்கள்

    1960ல் களத்தூர் கண்ணம்மாவில் மேக்கப் போட்டு நடிக்க ஆரம்பித்த கமல்ஹாசனின் முகம் விக்ரம் படம் வரை 232 படங்களில் அரிதாரத்தை தன் வாழ்வில் 63 ஆண்டுகள் பூசி நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த வயதிலும் கோலிவுட் இண்டஸ்ட்ரியை அந்த மெஷின் கன்னை தூக்கி சுமப்பது போல சுமந்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த கர்ஜனை நாயகன்.

    4 தேசிய விருதுகள்

    4 தேசிய விருதுகள்

    இவர் ஹாலிவுட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் 4 ஆஸ்கர் விருதுகளையே வென்றிருப்பார் என்றும் இவரது படைப்புத் திறமையை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். மூன்றாம் பிறை, நாயகன், தேவர்மகன் (தயாரிப்பாளர்) மற்றும் இந்தியன் என இதுவரை 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கமல்ஹாசன், உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஏகப்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளார்.

    63 ஆண்டுகால சாதனை

    63 ஆண்டுகால சாதனை

    முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ராஷ்ட்ரபதி விருதை வென்ற கமல்ஹாசன், விக்ரம் படத்தின் மூலம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தி 63 ஆண்டுகால சினிமா வாழ்க்கையையும் சாதனை வாழ்க்கையாக மாற்றியுள்ளார். இந்தியன் 2 படத்திற்காக இன்னொரு தேசிய விருதையும் கமல் தட்டிச் செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

    English summary
    Kamal Haasan's Extradinory 63 years of Cinema Journey is here. He acted 232 movies in 6 Languages and got 4 National Awards and so many State to International Award in his long film career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X