twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மார்ச் 6.. கோலிவுட்டில் 7 படம் ரிலீஸ்.. தாங்குமா தமிழ் சினிமா.. தப்பிக்குமா ஜிப்ஸி?

    |

    சென்னை: 2020ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே, இதுவரை தமிழ் சினிமாவில் இன்னமும் ஒரு சூப்பர் ஹிட் படம் வெளியாகவில்லை.

    வார வாரம் 5 படம், 6 படம், என வெறும் படங்களின் எண்ணிக்கைத் தான் அதிகரிக்கின்றன. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு சில படங்கள் மட்டுமே இதுவரை பாஸ் மார்க் எனும் பார்டரை தாண்டி உள்ளன.

    இந்நிலையில், அடுத்த வாரம் மார்ச் 6ம் தேதி 7 புதிய திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன.

     'தப்போ ரைட்டோ என்கிட்டயே பேசுங்க...' பேஸ்புக்கில் அதிரடியாக போன் நம்பர் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை! 'தப்போ ரைட்டோ என்கிட்டயே பேசுங்க...' பேஸ்புக்கில் அதிரடியாக போன் நம்பர் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!

    என்னென்ன படங்கள்

    என்னென்ன படங்கள்

    இந்த வாரம் திரெளபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி உள்ளன. அடுத்த வாரம் மார்ச் 6ம் தேதி, ஜிப்ஸி, பொன் மாணிக்கவேல், வால்டர், வெல்வட் நகரம், காக்டெயில், எட்டுத்திக்கும் பற, இந்த நிலை மாறும் என மொத்தம் 7 படங்கள் மோத உள்ளன.

    ஜிப்ஸி ஜெயிக்குமா?

    ஜிப்ஸி ஜெயிக்குமா?

    குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம், கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டும், சென்சார் பிரச்சனை காரணமாக, பல முறை அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. பல ‘கட்'களுடன் வரும் மார்ச் 6ம் தேதி வெளியாகும் ஜிப்ஸி ஜெயிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    காக்கிச்சட்டை

    காக்கிச்சட்டை

    மேலும், வரும் மார்ச் 6ம் தேதி பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் மற்றும் சிபிராஜின் வால்டர் ஆகிய இரு போலீஸ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப் போய் தற்போது, மார்ச் 6ம் தேதி திரைக்கு வருகிறது.

    குழந்தை கடத்தல்

    குழந்தை கடத்தல்

    முதன்முறையாக பிரபுதேவா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு காப் ஸ்டோரி படமான சிபிராஜின் வால்டர் படத்தில், குழந்தை கடத்தல் சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    வரலக்‌ஷ்மி படம்

    வரலக்‌ஷ்மி படம்

    நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாரின் ஹீரோயின் சென்ட்ரிக் படமான வெல்வட் நகரம் திரைப்படமும் வரும் மார்ச் 6ம் தேதி திரைக்கு வருகிறது. மனோஜ் குமார் நடராஜன் இயக்கி உள்ள இந்த படமும், கடந்த ஆண்டே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பல தடைகளை சந்தித்த நிலையில், வரும் வாரம் ரிலீசாகிறது.

    சர்ச்சையை கிளப்பிய காக்டெயில்

    சர்ச்சையை கிளப்பிய காக்டெயில்

    விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள காக்டெயில் திரைப்படமும் அடுத்த வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வருகிறது. காக்டெயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், முருகர் வேஷம் போட்டு யோகி பாபு இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

    இந்த படங்கள் மட்டுமின்றி, எட்டுத்திக்கும் பற, இந்த நிலை மாறும் உள்ளிட்ட படங்களும் அடுத்த வாரம் ரிலீசாகின்றன.

    யார் ஜெயிப்பா?

    யார் ஜெயிப்பா?

    ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீவாவின் ஜிப்ஸி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த படத்தின் பல காட்சிகள் சென்சாரில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருவதால், வரும் மார்ச் 6ம் தேதி ரேசில் யார் ஜெயிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Kollywood will see 7 tamil movies will get a clash on coming March 6th. Jiiva’s Gypsy, Sibiraj’s Walter and Prabhu Deva’s Pon Manickavel will lead the contest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X