சிம்புதேவனின் ராசியான எண் 6 போலும்

Recommended Video

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ

சென்னை: இம்சை அரசன் 23-ம் புலிகேசி மூலம் ஈர்த்த இயக்குனர் சிம்புதேவன், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை இயக்கியிருந்தார்.

3 வருட இடைவெளிக்கு பிறகு அவர் இம்சை அரசன் படத்தின் 2-ம் பாகமான 24-ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

6 music directors in single movie


இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது.

இதனால் துவண்டு போகாத சிம்புதேவன், வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் அடுத்த படத்தை எடுத்து முடித்துள்ளார். கசடதபற என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் , தலைப்பு உட்பட அனைத்தும் 6 ஆக அமைந்துள்ளது.

படத்தின் கதையில் 6 பாகங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனி இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என புதுவிதமாக இயக்கியுள்ளார் சிம்புதேவன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இசை அமைப்பாளர்களாக யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் என 6 ஒளிப்பதிவாளர்கள், ராஜா முஹமது, ஆண்டனி, காசி விஸ்வநாதன், விவேக் ஹர்சன், ரூபன் மற்றும் ப்ரவீன் கே.எல் என 6 பிரபல எடிட்டர்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

ஒரே படத்தில் இத்தனை தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு இவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்தது ஆச்சரியான விஷயமாக அமைந்துள்ளது. திரையில் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

எல்லாமே 6 ஆக இருப்பது முக்கியமல்ல.. படம் 100 நாள் ஓடணும்.. அதையும் மனசில் வச்சுக்கங்க பாஸ்களா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X