»   »  தேர்தலுக்கு முன் படங்களை வெளியிட்டுவிட தயாரிப்பாளர்கள் மும்முரம்!

தேர்தலுக்கு முன் படங்களை வெளியிட்டுவிட தயாரிப்பாளர்கள் மும்முரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. சினிமா காட்சிகளை விட தேர்தல் கள ஆக்ஷன் காட்சிகள் மகா சுவாரஸ்யமானவை என்பதால் பொதுவாகவே இந்த நாட்களில் தியேட்டர்கள் டல்லடிப்பது வழக்கம்.

இந்த முறை அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டியக்கம், நாம் தமிழர், பாஜக, இவர்களுக்கெல்லாம் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் தேமுதிக போன்றவற்றின் அரசியல் ஆக்ஷன்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சூடுபிடித்துவிட்டது.


6 New Release on March 11th

எனவே சினிமாவை விட இந்த தேர்தல் சினிமாவில் மக்களின் கவனம் திசை திரும்ப ஆரம்பித்துவிட்டது.


அவர்கள் கவனம் முழுசாக தேர்தல் பக்கம் திரும்பும் முன், எடுத்து வைத்திருக்கிற படங்களை வெளியிட்டு நாலு காசு பார்த்துவிடலாம் என்ற நோக்கில் படங்களை வரிசையாக வெளியிட ஆரம்பித்துவிட்டனர் தயாரிப்பாளர்கள்.


இந்த வெள்ளியன்று மட்டும் (பிப்ரவரி 11) ஆறு படங்கள் வெளியாக உள்ளன.


காதலும் கடந்து போகும் (காகபோ), அவியல், என்னை புடிச்சிருக்கா, கோடை மழை, மாப்ள சிங்கம், நட்பதிகாரம் என ஆறு படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன.


இதில் விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய காகபோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நானும் ரெளடிதான், சேதுபதி என இரண்டு ஹிட் படங்களுக்குப் பிறகு வெளிவரும் விஜய் சேதுபதியின் படம். இதில் வென்றால் ஹாட்ரிக் வெற்றி, 2013ல் சாதித்த மாதிரி.


350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பே வரிவிலக்கு அளித்து விட்டது.

English summary
Tamil Producers are keen in releasing their movies before elections. There are 6 new movies will his screens on Feb 11, Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil