இந்த வெள்ளிக்கிழமை நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 படங்கள் ரிலீஸ்!

By Shankar

இந்த வெள்ளிக்கிழமை விவேக் ஹீரோவாக நடித்த நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 புதிய படங்கள் வெளியாகின்றன.

இந்த ஜூனுடன் அரையாண்டு முடிகிறது. இந்த 6 மாதங்களில் 100 படங்கள் என்ற எண்ணிக்கையைத் தொடப் போகிறது தமிழ் சினிமா. இது ஒரு புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரம் தமிழ் சினிமா இந்த ஆண்டின் 90வது படம் வெளியாகிறது. ஜூன் இறுதிக்குள் மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளன.

இன்று மட்டும் 6 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை..

நான்தான் பாலா

நான்தான் பாலா

விவேக் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் இந்த நான்தான் பாலா. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் 125 அரங்குகளிலும் பெங்களூரில் 25 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகிறது. சர்வதேச அளவிலும் படம் வெளியாகிறது. லாரன்ஸ் தயாரித்துள்ளார்.

மேலும் படங்கள்

முண்டாசுப்பட்டி

முண்டாசுப்பட்டி

விஷ்ணு, நந்திதா நடித்துள்ள இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராம் குமார் இயக்கியுள்ளார்.

மேலும் படங்கள்

உயிருக்கு உயிராக

உயிருக்கு உயிராக

மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. மனோஜ்குமார் இயக்கியுள்ளார். புதுமுகங்களுடன் பிரபு நடித்துள்ளார்.

மேலும் படங்கள்

ஓட்டம் ஆரம்பம்

ஓட்டம் ஆரம்பம்

விஎஸ்டி ஜான் என்பவர் இயக்கியுள்ள படம் இந்த ஓட்டம் ஆரம்பம். எல்லோருமே புதுமுகங்கள். கிடைத்த தியேட்டர்களில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படங்கள்

வாழும் தெய்வம்

வாழும் தெய்வம்

இது ஒரு பக்திப் படம். ஆர் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். நளினி, ராதா ரவி என தெரிந்த முகங்களும் உண்டு.

இந்தப் படம் தவிர, திருட்டுப் போகும் மனசு என்ற படமும் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X