தனுஷ்... இந்த நாளை மறக்க முடியுமா? #6YearsOfWhyThisKolaveri
சென்னை : நடிகர் தனுஷ், இப்போது பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரைக்கும் சென்றுவிட்டார். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் 'The extraordinary journey of the Fakir' படம் வெளியாக இருக்கிறது.
தயாரிப்பாளராக தமிழ், மலையாளம், கன்னடம் வரைக்கும் கால் பதித்து வெற்றிகளைக் குவித்து வருகிறார் தனுஷ்.
இயக்குநராகவும் 'ப.பாண்டி' படத்தின் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். இத்தனையும் ஆறு வருடங்கள் முன்பு இந்த நாளுக்குப் பிறகு வந்தவைதான்.

சினிமா பயணம்
தனுஷின் சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் நிறைய இடையூறுகள் இருந்தாலும் அதையெல்லாம் எதிர்த்துப் போராடி தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது தன்னம்பிக்கையும், இடைவிடாத முயற்சியும்.

தனுஷ் ஹிட்
சினிமாவில் நடிகர்களின் வெற்றி எப்படி இருக்கும் என்றே கூற முடியாது. வெற்றி, தோல்வி இரண்டுமே நடிகர்களின் வாழ்க்கையில் மாறி மாறி வரும். தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயம் '3' படத்தில் இடம்பெற்ற 'வொய் திஸ் கொலவெறி டி' பாடல்.

#6YearsOfWhyThisKolaveri
6 வருடங்களுக்கு முன் இதே நாள்தான் இப்பாடல் வெளியாகி இருக்கிறது. இதனால் கொலவெறி பாடல் ரசிகர்கள் #6YearsOfWhyThisKolaveri என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் இப்பாடல் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.

அனிருத் அறிமுகம்
இந்தியாவில் யூ-ட்யூபில் அதிகம் தேடப்பட்ட பாடல் என்ற பெருமையும் இப்பாடலுக்கு உண்டு. அதோடு அனிருத் இசையமைப்பாளராக களமிறங்கிய முதல் படம் இதுதான். இப்போது முன்னணி இசையமைப்பாளராக பட்டையைக் கிளப்புவதற்கெல்லாம் விதை இந்தப் பாடல் போட்டது.

குழந்தைகளின் ஃபேவரிட்
'வொய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் குழந்தைகளையும், சிறுவர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் தனுஷ். இந்தப் பாடலுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கவர் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டதும் பெரிய சாதனை. குழந்தைகள் பாடிய வீடியோக்கள் யூ-ட்யூபில் சக்கைப்போடு போட்டன.
முதல் இந்திய வீடியோ
உலகம் முழுவதும் 100 மில்லியன் யூ-ட்யூப் பார்வைகளைக் கடந்த முதல் இந்திய வீடியோ எனும் சாதனையைப் படைத்தது இந்த 'வொய் திஸ் கொலவெறி' பாடல். இதுவரை 133 மில்லியன் பார்வ்வைகளைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











