திருடு போனது 60 சவரன்.. கிடைத்தது 100 சவரன்.. ரஜினி வீட்டிலும் கைவரிசையா? ஐஸ்வர்யாவிடம் விசாரணை?
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் 100 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யாவிடம் நேரடியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தை இயக்குவதில் பிஸியாக இருந்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மற்றும் அவரது கணவர், கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளன

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா லாக்கரில் இருந்த, ஆரம், நெக்லஸ், கம்மல், வளையல், நவரத்தினம், வைரம் என 60 சவரன் மதிப்பு நகையை காணவில்லை. அந்த நகைகளை கடைசியாக, தங்கை செளந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்திவிட்டு லாக்கரில் வைத்துவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக லாக்கரை திறக்காகவில்லை.

60 சவரன் நகையை காணவில்லை
கடந்த பிப்ரவரி 10ந் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. ஆனால், லாக்கர் உடைக்கப்படவில்லை, மூடிவைத்த லாக்கர் அப்படியே இருந்துள்ளார். மேலும், லாக்கரில் நகை இருப்பது வீட்டில் பணிபுரியும் 3 பணியாளர்களுக்கு தெரியும், இதனால், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா போலீசில் புகார் தெரிவித்து இருந்தார்.

வசமாக சிக்கி பணிப்பெண்
இதையடுத்து போலீசார் பணியாளர்களிடம் வங்கி கணக்கை ஆய்வு, இதில் பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத போது கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்வரி நகையை திருடி சோழிங்கநல்லூரில் ரூ95 லட்சத்தில் வீடுகட்டி உள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், கார் ஓட்டுநரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் போலீஸ் விசாரணை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 60 சவரன் நகை திருடுபோனதாக புகார் அளித்துள்ள நிலையில், 30 கிராம் வைரம், 80 பவுனுக்கு மேல் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், சோழிங்கநல்லூரின் வீட்டு பத்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், ஈஸ்வரி ஐஸ்வர்யா வீட்டில் மட்டுமில்லாமல், ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிலும் நகைகளை திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நம்பிக்கை துரோகம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணிப்பெண்ணான ஈஸ்வரி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்து இருக்கிறார். இதனால் தான், லாக்கர் சாவி வைக்கும் இடத்தை ஈஸ்வரிக்கு தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தான் ஈஸ்வரி பணியில் இருந்து விலகி உள்ளார். அவர் வேலையை விட்டு சென்ற போதும், அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.


Click it and Unblock the Notifications











