twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே பாட்டு, ஓஹோ ஹிட்... ஆச்சரியப்படுத்தும் 60 வயது பழங்குடிப் பெண் நஞ்சம்மா!

    By
    |

    சென்னை: திறமையான கலைஞர்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுப்பதில் கேரள சினிமா எப்போதுமே முன்னோடி.

    பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை பாட வைத்து பிரபலமாக்கிய கேரள சினிமா, இப்போது அறிமுகப்படுத்தி இருப்பது நஞ்சம்மா என்ற 60 வயது பழங்குடிப் பெண்ணை!

    பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து இந்த மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆன மலையாள படம் அய்யப்பனும் கோஷியும்.

     எக்கச்சக்க போட்டி.. இனிமே அந்த படம் ரிலீசாகுறது ரொம்ப கஷ்டம்.. ஆனா அவங்க ஹேப்பியாம்! எக்கச்சக்க போட்டி.. இனிமே அந்த படம் ரிலீசாகுறது ரொம்ப கஷ்டம்.. ஆனா அவங்க ஹேப்பியாம்!

    கன்னாபின்னா வைரல்

    கன்னாபின்னா வைரல்

    சச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு (கிழக்கே சந்தனமரம் பூத்திருக்கு. அதை நாமும் பறிச்சுகிட்டு ஏரோபிளைனை பார்ப்போமா? ) என்ற பாடல் பட்டிதொட்டிங்கும் பரவல் ஹிட். யூடியூப், ஃபேஸ்புக், டிக் டாக் என சமூக வலைதளங்களில் கன்னாபின்னா வைரல் ஆகியிருக்கிறது. யூடியூப்பில் மட்டும் 66 லட்சம் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது இப்போதுவரை.

    அதனால்தான் கண்ணீர்

    அதனால்தான் கண்ணீர்

    இந்த அளவுக்கு பிரபலமான இந்தப் பாடலை யூடியூப்பில் கேட்டால், பாடலை பாடியிருக்கும் நஞ்சம்மா, கண்களைத் துடைப்பது தெரியும். 'என் வாழ்க்கையைத்தான் பாடலா பாடினேன். அதனால்தான் கண்ணீர்' என்கிறார் நஞ்சம்மா. ரெக்கார்டிங்கின் போது, படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர் உட்பட அனைவருமே அழுது கொண்டிருந்தார்களாம்.

    பிருத்விராஜ், பிஜூமேனன்

    பிருத்விராஜ், பிஜூமேனன்

    தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மா, அங்கு ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். சினிமா மீது ஆரம்பகாலத்தில் அதிக ஆர்வம் இருந்தது, இப்ப இல்லை என்று சொல்லும் நஞ்சம்மா, பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். இவரை சினிமாவுக்கு அழைத்துச் சென்றவர் அட்டப்பாடியில் சமிதி என்ற அமைப்பை நடத்தும் பழனிச்சாமி.

    மூதாதையர் பாட்டு

    மூதாதையர் பாட்டு

    'சினிமாவில் இதுதான் எனக்கு முதல் பாடல். இருளர் மொழி பாட்டு. குழந்தைக்கு பால் கொடுக்கும் போது எங்க மூதாதையர் பாடும் பாட்டு இது. இந்தப் பாடல் ரசிக்கப்படுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியெல்லாம் பாடல் இருக்கிறது என்பது இப்போதைய தலைமுறைக்குத் தெரியவேண்டும் என்று கூறுகிறார் நஞ்சம்மா.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

    இந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்த பின் கூட, தனக்கு மலையாள ஹீரோக்கள் பிருத்விராஜ், பிஜூமேனன் என்றால் யாரென தெரியாது என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா அதிகம் பிடிக்கும் என்கிற இவர், எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா படங்களை அதிகம் பார்த்திருக்கிறார். கமல், பாக்யராஜ், வடிவேலுவை சந்தித்து பேசியிருப்பதாகச் சொல்லும் நஞ்சம்மாவுக்கு தமிழ், மலையாளத்தில் அதிகமாக பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

    Read more about: song பாட்டு
    English summary
    Nanjamma says,'I am happy that people have loved our kalakakatha song'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X