twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    64வது தேசிய விருது.. 'எந்த பக்கம்' பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார் வைரமுத்து

    By Karthikeyan
    |

    டெல்லி: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது.

    64 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறுது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

     64th National Film Awards

    தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோக்கர் பட இயக்குநர் ராஜூமுருகன் பெற்றார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படத்தில் வந்த எந்தப் பக்கம் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது.

    24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது திருநாவுக்கரசுக்கும், ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருது ராஜூசுந்தரத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு கிடைத்துள்ளது.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்ஷன் டைரக்டர் விருது புலிமுருகன் படத்திற்காக பீட்டர் ஹெய்னுக்கு வழங்கப்பட்டது.

    English summary
    Veteran lyricist Vairamuthu won his seventh National Award for the song 'Endha Pakkam' from Vijay Sethupathi-starrer Dharmadurai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X