சுதந்திர தினத்துக்கு புது முயற்சி.. 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் 'தமிழா தமிழா'

By

சென்னை: சுதந்திர தினத்தன்று புதிய முயற்சியாக 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் தமிழா தமிழா பாடலை பாடல் உள்ளனர்.

Recommended Video

தெலுங்கிலும் 96 படத்தை இயக்கி வருகிறார் ப்ரேம்

பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸ், யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்.

இதில் இவருடன் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பாடகி சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங்காவலர்களாக பொறுபேற்கிறார்கள்.

65 Singers has sung Tamizha Tamizha Song

இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்து கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவது இந்த அமைப்பின் நோக்கம். இதன் முயற்சியாக 'டுகெதர் அஸ் ஒன்' என்ற பாடலை, ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மோகன்லால், மற்றும் யஷ் ஆகியோர், ஆகஸ்ட் 15 -ஆம் நாள், காலை 11 மணியளவில் வெளியிடுகிறார்கள்.

இதுபற்றி ஶ்ரீநிவாஸ் கூறியதாவது: இதை தொடர்ந்து அமைப்பின் நோக்கத்திற்காக மக்களிடையே நிதி உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். பேரிடர் நேரங்களில் ஒற்றுமையை குறிக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் 28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த பிரபலமான பாடல். இந்த பாடலை 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்தபடியே ஐந்து மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி) ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

எங்கள் அமைப்பு செப்டம்பர் மாதம் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக, ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த 'டுகெதர் அஸ் ஒன்' பாடலை ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த வீடியோ லிட்பாக்ஸ் மீடியாவால் தொகுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X