twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டின் 66வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஏமாற்றத்தை சந்தித்த தமிழ் சினிமா.. ஒர் ரீவைன்ட்!

    |

    சென்னை: 2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

    ஆண்டுதோறும் திரைப்படத்துறையில் சாதிக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்து வருகிறது. அதன்டி இந்த ஆண்டிற்கான தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற படங்கள், நடிகர்கள் குறித்த அறிவிப்பினை விருது கமிட்டி நடுவர் குழு தலைவர் ராகுல் ரவெய்ல் அறிவித்தார். இந்த ஆண்டு தேசிய விருதுக்கு 419 படங்கள் இந்தாண்டு போட்டியிட்டன.

    முதன் முறையாக

    முதன் முறையாக

    இவற்றில் 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் முதன்முறையாக, படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது, உத்தர்காண்ட் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக 'கீர்த்தி சுரேஷிற்கு' வழங்கப்பட்டது.

    ஆயுஷ்மான் குரானா

    ஆயுஷ்மான் குரானா

    சிறந்த நடிகர்களுக்கான விருது அந்தாதூன் படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும உரி படத்திற்காக விக்கி கவுசலுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வு செய்யப்பட்டது.

    சிறந்த இந்தி படம்

    சிறந்த இந்தி படம்

    சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த உரி படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த இந்தி படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதூன் தேர்ந்து எடுக்கப்பட்டது.

    சிறந்த இசையமைப்பாளர்

    சிறந்த இசையமைப்பாளர்

    பத்மாவத் திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருது 'பாதாய் ஹோ' படத்தில் நடித்த சுரேகா சிக்ரி அறிவிக்கப்பட்டார்.

    சிறந்த பாடகி

    சிறந்த பாடகி

    சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது அரிஜித் சிங்கிற்கு பத்மாவத் படத்திற்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகிக்கான விருது பிந்து மாலினிக்கு கன்னட படம் நிதிசராமிக்காக அறிவிக்கப்பட்டது.

    ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்

    ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்காக தெலுங்கு படம் ரங்கஸ்தலம் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கான தேசிய விருது 'கே.ஜி.எஃப்' திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ஜூரி

    சிறப்பு ஜூரி

    சிறந்த நடனத்திற்கான விருது பத்மாவத் படத்தில் வரும் கூமர் பாடலுக்கு அறிவிக்கப்பட்டது. தேசிய விருது சிறப்பு ஜூரி விருது ஜோஜு ஜார்ஜ் மற்றும் சாவித்ரி சசிதரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

    குஜராத்திய படம்

    குஜராத்திய படம்

    சிறந்த திரைப்படத்திற்கான விருது குஜாராத்தின் ஹெலாரோவுக்கு அறிவிக்கப்பட்டது. தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஒண்டல்லா எரடல்லா என்ற கன்னட படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

    தி எடிசன் ஆப் இந்தியா

    தி எடிசன் ஆப் இந்தியா

    சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது 'ஜி.டி.நாயுடு - தி எடிசன் ஆப் இந்தியா' என்ற படத்திற்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஏடபிள்யூஇ (தெலுங்கு) க்கான ஸ்ருஷ்டி கிரியேட்டிவ் ஸ்டுடியோ மற்றும் கேஜிஎஃப் (கன்னடம்) க்கான யுனிஃபை மீடியாவுக்கு அறிவிக்கப்பட்டது.

    ஏமாற்றம்தான்..

    ஏமாற்றம்தான்..

    ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட படங்களை வெளியிடும் தமிழ் சினிமாவுக்கு இம்முறை ஏமாற்றம்தான் மிஞ்சியது. 2018ஆம் ஆண்டு ஏராளமான சிறந்த படங்கள் தமிழ் சினிமாவில் வெளியானது. ஆனால் சிறந்த தமிழ் படமாக பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய பாரம் அறிவிக்கப்பட்டது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    இந்த ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை, இயக்குனர் ராம் இயக்கிய பேரன்பு, இயக்குனர் லெனின் இயக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஒரே ஒரு விருது

    ஒரே ஒரு விருது

    ஆனால், அனைவரும் அதிர்ச்சி அடையும்படி இந்த படங்கள் எதுவுமே தேசிய விருதுகள் பிரிவுகளில் இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தரம் காரணமாக தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 2 அல்லது 3 விருதுகள் அதிகபட்சம் 6 விருதுகள் பெற்று வந்துள்ளன. ஆனால், இந்த முறை பிராந்திய மொழி படத்துக்கான விருது மட்டுமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளது.

    English summary
    66th National film awards announce on 2019 August 9th. This year Tamil cinema got only one award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X