67 வயதிலும் 90'ஸ் கிட்ஸ்களுக்கு ஈடாக ஜிம்மில் தெறிக்கவிடும் சரத்குமார்
சென்னை: 67 வயதாகும் நடிகர் சரத்குமார் இளைஞர்களுக்கு ஈடாக ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
இந்த வயதிலும் பைசப்ஸ், டிரைசப்சை முறுக்கி அவர் காட்டும் மாசைக் கண்டு 90'ஸ், 2000 கிட்ஸ் எல்லாம் மிரண்டு போகிறார்கள்.
சரத்குமாரின் இந்த வீடியோவிற்கு நடிகையும், அவரது மனைவியுமான ராதிகாவும் பாராட்டிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

பலருக்கு இன்ஸ்பிரேசன்
புலன்விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனாலும் கூட, பின்னாளில் ஹீரோவாகி முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானவர் நடிகர் சரத்குமார். ஸ்டைலாகப் புகைபிடிப்பதையும், மது அருந்தும் கலாச்சாரங்களையும் ஹீரோக்கள் முன்னிருத்திக் கொண்டிருந்த அக்காலக்கட்டத்தில், கட்டுமஸ்தான உடற்கட்டோடு தனது படங்களில் வொர்க்அவுட் செய்யும் காட்சிகளை இடம்பெறச் செய்தார் சரத்குமார். குறிப்பாக சூரியன், வேடன் போன்ற படங்கள் அன்றைய இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேசனாக இருந்தது. அப்படங்களைப் பார்த்துவிட்டு ஜிம்மையும், விளையாட்டு மைதானங்களையும் தேடிப் போன இளைஞர்கள் பலர் தான் இன்று 30, 40 வயதில் கட்டுமஸ்தான உடற்கட்டோடும், ஆரோக்கியத்தோடு இருக்கின்றனர். அந்த வகையில் சரத்குமார் பலருக்கு இன்ஸ்பிரேசன் தான்.

வாவ் சொன்ன ராதிகா
இந்நிலையில், சரத்குமார் மீண்டும் வொர்க் அவுட்களைத் தொடங்கி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இன்றும் அவரது உடற்கட்டு பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக மிரட்டுகிறது. அதனைப் பார்த்த பலர் பின்னூட்டங்களில் பாராட்டித் தள்ளுகின்றனர். அவர்களில் சரத்குமாரின் மனைவி ராதிகாவும், 'வாவ் நீங்க ஒரு மோட்டிவேட்டர்' எனத் தெரிவித்திருக்கிறார்.

சரத்குமார் - ராதிகா மகன்
சரத்குமார் ராதிகா தம்பதியின் மகனான ராகுல் தற்போது வளர்ந்து படித்துப் பட்டம் பெற்றுவிட்டார். யுடபிள்யூசிஎஸ்இஏ பல்கலைக்கழகத்தில் படித்த ராகுலுக்கு, கடந்த மாதம் தான் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சரத்குமாரும், ராதிகாவும் கலந்து கொண்டனர். "மரியாதையும், மனித மதிப்புகளும் அறிந்த ஒரு சிறந்த மனிதனாக நீ வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது ராகுல்" என நெகிழ்ச்சியோடு சரத்குமார் ராகுலின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

தளபதி 66 படப்பிடிப்பு
இரண்டு முறை கோவிட் பாதிப்பு, மூட்டு அறுவை சிகிச்சை என ஆரோக்கிய ரீதியாகப் பல சிக்கல்களை எதிர்கொண்ட பின்னர், தற்போது அதிலிருந்து மீண்டு உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகின்றார் சரத்குமார். தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்யுடன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் அதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அதேவேளையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும்...
சினிமா துறையில் சில நடிகர்கள் மட்டுமே உடலை மிகவும் கட்டுக்கோப்பாக பலகாலமாக பராமரித்து வருகின்றனர். தங்களது உடலை ஒவ்வொரு நாளும் மெருகேற்றி எந்தவிதமான சோம்பேறித்தனமும் இல்லாமல் உடல் கட்டு மஸ்தான் போல மிகவும் பொலிவுடன் செயல்படுகிறார்கள். பெரிய ஹீரோ ஒரு பக்கம் என்றால் குணச்சித்திர நடிகர்கள் சிலர் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். அதில் குறிப்பாக ரியாஸ்கான் பல காலமாக தனது உடலை உடற்பயிற்சி மூலம் மிகவும் சீராக மற்றவர்கள் முன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தனது உடலை செதுக்கி வருகிறார்.

முக்கியத்துவம் அதிகம்
ஆக்சன் கிங் அர்ஜுன் நீண்ட நாட்களாக உடற்பயிற்சி மூலம் மிகவும் பொலிவுடன் இன்று வரை தென்படுவார் ,நடிகர் ஆர்யா, பரத், நடிகர் ஷாம், அருண் விஜய், போன்றவர்களும் உடற்பயிற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். பல விதமான சீரியல் மற்றும் சினிமா என்று அசத்தி வரும் பிருத்திவிராஜ், சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் போன்றோரும் உடற்பயிற்சிக்கு மிகவும் நேரம் காலம் ஒதிக்கி வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











