விருது பெறாத கலைஞர்களும் உன்னத கலைஞர்கள் தான்… வைரமுத்துவின் வித்தியாசமான வாழ்த்து !
சென்னை : கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெறாதவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அழகான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கி வருகிறது.

கொரோனாவால் தாமதம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, கொரோனா அச்சம் காரணமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில் 2019ம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

2 விருது
இதில் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் மனத்தை கவர்ந்த தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும், சிறந்த திரைப்படமாக அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மட்டும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இது தனுஷூக்கு 2வது தேசிய விருதாகவும், ஆடுகளம் படத்திற்காக இவர் ஏற்கனவே தேசிய விருதை வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

2 விருது
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திய விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஒரு விருது என பல தமிழ் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வைரமுத்து ட்விட்
விருது பெற்ற அனைவருக்கும் தமிழ் திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் விருது பெற்றவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்ததோடு விருது பெறாத கலைஞர்களும் உன்னத கலைஞர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான ட்விட்
அவர் பதிவிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில், திரைப்பட தேசிய விருது பெறும் அனைத்து கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
சில உன்னதக் கலைஞர்கள்
விருது பெறாமல் போயிருக்கலாம்
ஆனால், விருது பெற்ற அனைவரும்
உன்னதக் கலைஞர்கள்
எல்லார்க்கும்
என் வளர்பிறை வாழ்த்துக்கள் என. ஒரு வித்தியாசமான வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











