Don't Miss!
- Education
TNSHRC Steno, Typist Recruitment 2023: மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.65 ஆயிரத்தில் பணி ...!
- Technology
இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?
- News
நீங்களும் குறும்படம் எடுக்கலாம்! அரசு வழங்கும் அசத்தல் வாய்ப்பு! ஜெயித்தால் பரிசு எவ்வளவு தெரியுமா?
- Finance
300 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வீவொர்க்.. யாராக இருக்கும்.. கவலையில் ஊழியர்கள்!
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
- Automobiles
ஃப்ரான்க்ஸ் கார நெனச்சு இந்தியர்கள் கொண்டாட கூடிய தருணம் இது... ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கப்போகுது
- Sports
மெஸ்ஸி, ரொனால்டோ மோதிய கடைசி கால்பந்து ஆட்டம்.. யார் எத்தனை கோல்? வென்றது யார்?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க உங்களை முதுகில் குத்த காத்திருக்கும் போலி நண்பர்களாக இருப்பார்களாம்... ஜாக்கிரதை!
தேசிய திரைப்பட விருதுகள் 2022:: தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்!
டெல்லி : நடிகர் சூர்யா நடித்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நான்கு விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது.
இந்திய பயணிகள் விமான சேவையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப்போற்று
வாழ்க்கை வரலாற்றை உணர்வுபூர்வமாகவும், நல்லதொரு தயாரிப்புத் தரத்துடன் திரையில் கொடுத்திருந்தார் இயக்குனர் சுதா கோங்கரா.
பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்!

பொருத்தமான தலைப்பு
படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பு, பொருத்தமான நடிகர்கள், இயல்பான கதைக்களம் என ஆரம்பத்திலேயே ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் நெடுமாறன் ராஜாங்கம் என்ற துடிப்பான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே படத்தை பார்க்கும் போது ஏற்பட்டது.

ஜெயிச்சிட்டோம் மாறா
இந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க நடித்திருக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாறன் கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே புகுத்தி நடித்திருந்தார் சூர்யா. தன்னால் செய்து முடிக்க முடியும் என்ற கர்வம், எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல், எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்காத விடாமுயற்சி என அவரது கண்கள் முதல் கால்கள் வரை மாறன் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

சிறந்த நடிகர்
பல்வேறு விருதுகளை குவித்த சூரரைப்போற்று திரைப்படம் இன்று மூன்று தேசியவிருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. இப்படத்தில் மாறனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரரைப் போற்று படத்தின் பின்னனி இசைக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதினை ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

4 விருதுகள்
தமிழில் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தில் 'பொம்மி' கதாப்பாத்திரத்திரத்தில் நடித்ததற்காக அபர்ணா பாலமுரளிக்கு இவ்விருந்து வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் 4 விருதுகளை குவித்துள்ளது.