twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய திரைப்பட விருதுகள் 2022:: தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்!

    |

    டெல்லி : நடிகர் சூர்யா நடித்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நான்கு விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது.

    இந்திய பயணிகள் விமான சேவையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப்போற்று

    வாழ்க்கை வரலாற்றை உணர்வுபூர்வமாகவும், நல்லதொரு தயாரிப்புத் தரத்துடன் திரையில் கொடுத்திருந்தார் இயக்குனர் சுதா கோங்கரா.

    பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்! பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்!

    பொருத்தமான தலைப்பு

    பொருத்தமான தலைப்பு

    படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பு, பொருத்தமான நடிகர்கள், இயல்பான கதைக்களம் என ஆரம்பத்திலேயே ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் நெடுமாறன் ராஜாங்கம் என்ற துடிப்பான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே படத்தை பார்க்கும் போது ஏற்பட்டது.

    ஜெயிச்சிட்டோம் மாறா

    ஜெயிச்சிட்டோம் மாறா

    இந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க நடித்திருக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாறன் கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே புகுத்தி நடித்திருந்தார் சூர்யா. தன்னால் செய்து முடிக்க முடியும் என்ற கர்வம், எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல், எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்காத விடாமுயற்சி என அவரது கண்கள் முதல் கால்கள் வரை மாறன் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    பல்வேறு விருதுகளை குவித்த சூரரைப்போற்று திரைப்படம் இன்று மூன்று தேசியவிருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. இப்படத்தில் மாறனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூரரைப் போற்று படத்தின் பின்னனி இசைக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதினை ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment
    4 விருதுகள்

    4 விருதுகள்

    தமிழில் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தில் 'பொம்மி' கதாப்பாத்திரத்திரத்தில் நடித்ததற்காக அபர்ணா பாலமுரளிக்கு இவ்விருந்து வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் 4 விருதுகளை குவித்துள்ளது.

    English summary
    68th national awards 2022 : best actor tamil suriya,aparna balamaurali,GV prakash for Soorarai pottru movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X