68வது தேசிய விருதுகள் அறிவிப்பு: எதிர்ப்புகளை சந்தித்த சூரரைப் போற்று..5 தேசிய விருதுகளை தட்டி தூக்கியது
டெல்லி : 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
305 பிராந்திய மொழிப்படங்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.
305 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன.

68வது தேசிய விருதுகள்
68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்த விருதுகளை அறிவித்து வருகின்றன. ஐந்து பிரிவுகளின்கீழ் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2020 ஜனவரி 1ம் தேதி முதல் 2020 டிசம்பர் 31 வரையிலான திரைப்படங்கள் இந்தப் போட்டியில் இணைந்துள்ளன.

சூரரைப் போற்று படம்
தமிழில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட படங்களும் இணைந்திருந்தன. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே சூர்யாவின் சூரரைப் போற்று படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

4 பிரிவுகளில் விருதுகள்
நான்கு பிரிவுகளில் இதுவரை சூரரைப் போற்று படம் விருதுகளை குவித்துள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை குவித்துள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்குரா இயக்கியிருந்தார்.

சிறந்த நடிகர் சூர்யா
சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா முரளி மற்றும் சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளனர். பயோ பிக்காக வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை திரையில் கொடுத்தது.

மிரட்டலான கேரக்டர்
இந்தப் படத்தில் சூர்யா அந்த கேரக்டராகவே மாறி நடித்திருந்தார். குறிப்பாக பணம் இல்லாமல், ஊருக்கு செல்ல காசு கேட்டு அவர் நடித்திருந்த அந்தக் காட்சிகள் மிரட்டலாக அமைந்திருந்தனர். அனைவரையும் கண்கலங்க வைத்தன. இந்நிலையில், இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை போலவே தேசிய விருதுகள், அதுவும் பல்வேறு பிரிவுகளில் கிடைத்துள்ளது ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
Recommended Video

5 பிரிவுகளில் விருதுகள்
5 பிரிவுகளில் இதுவரை சூரரைப் போற்று படம் விருதுகளை குவித்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை குவித்துள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்குரா இயக்கியிருந்தார்.


Click it and Unblock the Notifications











