68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு: ரேஸில் சூர்யா, விஜய் சேதுபதி படங்கள்!

டெல்லி: திரைப்படங்களுக்கான 68வது தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழில் இருந்து சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்துள்ள கா/பெ. ரணசிங்கம் ஆகிய படங்கள் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தேசிய விருதுகள் அறிவிப்பு திரைத்துறையினர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வெளியான சிறந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இசையமைப்பாளர் உட்பட ஏராளமான பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுகள், திரைத்துறையினரின் மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கலக்கல்

கடந்த ஆண்டு கலக்கல்

கடந்த ஆண்டு தமிழில் இருந்து நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் டி. இமான், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோர் தேசிய விருதுகள் வென்று அசத்தினர். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தனுஷ் சிறந்த நடிகர் விருதையும், விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகர் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு எப்படி?

இந்த ஆண்டு எப்படி?

இந்த நிலையில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆஸ்கர் வரை சென்று திரும்பிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று' திரைப்படம் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கா/பெ. ரணசிங்கம் படமும் தேசிய விருது போட்டியின் களத்தில் உள்ளது.

மலையாள தேசத்தில் இருந்து...

மலையாள தேசத்தில் இருந்து...

இந்தியத் திரைத்துறையில் உலக சினிமா தரத்திலான யதார்த்தமான படைப்புகள் மலையாளத்தில் அதிகம் வெளியாகின்றன. இதனால், எப்போதும் போன்று, இந்தாண்டும் தேசிய விருது பட்டியலில் மலையாள திரைப்படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. 'அய்யப்பனும் கோஷியும்' சிறந்த படத்திற்கான விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடித்த பிஜூ மேனனுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ஃபஹத் ஃபாசில் நடித்த ‘மாலிக்' படம் சிறந்த சவுண்ட் டிராக் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

Recommended Video

Ravi Raghavendra | Rocketry படத்துக்கு மாதவனுக்கு கண்டிப்பா National Award கிடைக்கும் | *Interview
இன்னும் எதிர்பார்க்கலாம்

இன்னும் எதிர்பார்க்கலாம்

தமிழ், மலையாளம் தவிர மற்ற மொழி படங்களும் தேசிய விருதுகளை வெல்லும் முனைப்பில் களத்தில் உள்ளன. அறிவிப்புகள் முழுமையாக வெளியாகும் போது, ரசிகர்களுக்கு சில சர்ப்ரைஸ்கள் கிடைக்கலாம். ஆனாலும் தமிழ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X