கோடை விடுமுறை ஸ்பெஷலாக வரும் 7 படங்கள்!
சென்னை: இந்த கோடை விடுமுறைக்கு ரசிகர்களை மகிழ்விக்க 7 புதிய, பெரிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸன் இந்த கோடை விடுமுறைதான். பெரிய நடிகர்கள் அனைவருமே எப்படியாவது இந்த கோடையில் தங்கள் படங்களை வெளியிட முயற்சிப்பது வழக்கம்.
இந்த கோடைக்கும் 7 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

கோச்சடையான்
அவற்றில் முதலிடம்... சந்தேகமில்லாமல் கோச்சடையானுக்குத்தான். ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதில் இந்தத் தலைமுறை இளைஞர்கள் ஆவலாக உள்ளனர். ஏற்கெனவே கோச்சடையான் கேம்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மே 1 அல்லது 16
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 11-லிருந்து தள்ளிப் போயிருக்கிறது. அநேகமாக மே 1 அல்லது 16-ம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நான் சிகப்பு மனிதன்
விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்' படம் வருகிற 11-ந் தேதி ரிலீசாகிறது. தமிழ், புத்தாண்டையொட்டி இப்படம் வருவதால் தயாரிப்பு தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். கோச்சடையான் தள்ளிப்போனதும் இப்படத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தெனாலிராமன்
வடிவேலு இரு வேடங்களில் நடித்துள்ள ‘தெனாலிராமன்' படம் வருகிற 18-ந் தேதி வெளியாகிறது. 20-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை என்பதால், இந்தப் படம் ஈஸ்டர் ஸ்பெஷலாக வருகிறது.

வாயை மூடிப் பேசவும்
25-ந் தேதி துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள ‘வாயை மூடி பேசவும்' படம் வருகிறது. அதே நாளில் ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள ‘திருமணம் எனும் நிக்கா' படமும் வெளியாகிறது.
சித்தார்த், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள ‘ஜிகர்தண்டா' படம் மே 1-ந் தேதி வெளியாகிறது. அதேநாளில் ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்' படமும் வருகிறது.

விஸ்வரூபம் 2
கமல் நடித்து இயக்கியுள்ள இந்தப் படமும் பல மாதங்கள் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. இன்னும் சில பணிகள் முடியாததால் தாமதம் என்கிறார்கள். எப்படியும் மே இறுதிக்குள் ‘விஸ்வரூபம்-2' வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











