முன்னணி நடிகரின் திரைப்படங்கள்… நேரடியாக ஓடிடியில்..புது அப்டேட் !

மும்பை : அக்சய் குமார், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அமிதாப்பச்சன் ஆயுஷ்மான் குரானா இருவரும் இணைந்து முதன்முதலா நடித்த குலாபோ சிடாபோ OTT-யில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து அடுத்த எந்தெந்த படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தற்பொழுது புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

ரிலீசுக்கு தயாராகி

ரிலீசுக்கு தயாராகி

பாலிவுட் திரைப்படத்துறையில் எக்கச்சக்க படங்கள் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டு திரையில் வெளியிட தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரானா நோய்த்தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

திரைத்துறையும்

திரைத்துறையும்

இதனால் பல தொழில்களும் பல வேலைகளும் மிகவும் பாதிப்படைந்து இருக்கும் வேலையில் அதிகமான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்த திரைத்துறையும் தற்போது செய்வதறியாது தவித்துப் போய் உள்ளது.

காத்திருந்தது

காத்திருந்தது

இனிமேல் படப்பிடிப்புகளை தொடங்க சிறிது காலம் ஆகலாம் என தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியிருந்த பல படங்களை என்ன செய்யலாம் என அந்தந்த படக்குழு சில மாத காலம் காத்திருந்தது.

OTT தளங்களில்

OTT தளங்களில்

எனவே இப்போதுள்ள சூழலில் திரையரங்குகள் அவ்வளவு எளிதில் திறக்கப்படாது என அறிந்த பலரும் தங்களது படங்களை ஒவ்வொன்றாக OTT தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஹிந்தியில் குலாபோ சிடாபோ, தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், மலையாளத்தில் பாரன்சிக் போன்ற அனைத்து மொழிகளிலும் தங்களது படங்களை ஒவ்வொன்றாக OTT-யில் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

புதிய திரைப்படங்களை

புதிய திரைப்படங்களை

இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் அதிரடியாக 7 புதிய திரைப்படங்களை அதுவும் முன்னணி கதாநாயகர்களின் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படங்களை தற்போது OTT தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

லட்சுமி பாம்

லட்சுமி பாம்

அவ்வாறு வெளியாகவிருக்கும் படங்களில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த காஞ்சனா திரைப்படம் தற்போது அக்சய்குமார் நடிப்பில் லட்சுமி பாம் என உருவாகி உள்ள நிலையில், இந்த படம் தியேட்டரில் வெளியாகாத நிலையில் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது.

Recommended Video

V-CONNECT | ACTOR VAIYAPURI CHAT | கோவில்களை திறக்க வேண்டும் | FILMIBEAT TAMIL
நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

லட்சுமி பாம் படத்துடன் இணைந்து அஜய் தேவ்கான் நடித்த புஜ், அபிஷேக் பச்சன் நடித்த பிக் புல், சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான தில் பேசாரா, ஆதித்யா ராய் கபூரின் சதக் 2, வித்யூத் ஜம்வால் நடித்த குதா ஹபிஸ், குணால் கேமு நடித்த லூட்கேஸ் என முன்னணி நடிகர்கள் நடித்த இந்த 7 திரைப்படங்களும் முதல் முறையாக திரையரங்குகளில் வெளியிடப்படாமல் OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக சில அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X