பான் இந்தியா மோகம்.. தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் 7 நட்சத்திரங்கள்.. ரூட் போட்ட டாப் ஹீரோ!
சென்னை : 2024ஆம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் பாலிவுட்டின் 7 முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் பாலிவுட் நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அப்படிதான் ரம்பா, சிம்ரன், ராணி முகர்ஜி, ஈஷா டியோல், பிபாசா பாசு என்று ஏராளமான நட்சத்திரங்கள் தமிழ் பக்கம் வந்தனர். பின்னர் 2012ஆம் ஆண்டுக்கு பின் பாலிவுட் வில்லன்களை தமிழ் சினிமா நாயகர்களுக்கு வில்லனாக்கி இயக்குநர்கள் வித்தியாசம் காட்டினார்கள்.

அப்படிதான் துப்பாக்கி, சிங்கம் 3, கத்தி, தர்பார் உள்ளிட்ட படங்களில் பாலிவுட் நாயகர்கள் வில்லன்களாக நடிக்க வைக்கப்பட்டனர். இதன் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களின் டப்பிங் ரைட்ஸ் பாலிவுட்டில் நல்ல தொகைக்கு சென்றது. தற்போது பான் இந்தியா படங்கள் தான் ட்ரெண்டில் உள்ளன. இதனால் வடஇந்திய சினிமாவில் தென்னிந்திய நட்சத்திரங்களும், தென்னிந்திய சினிமாவில் வட இந்திய நட்சத்திரங்கள் அறிமுகமாவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாலிவுட்டில் இருந்து 7 முன்னணி நட்சத்திரங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் "OG" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இருந்தாலும், முக்கிய வில்லனாக இம்ரான் ஹாஸ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் மலையாளத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷரஃபுதீன் உள்ளிட்டோர் நடித்து வரும் ஹெல்லோ மம்மி படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி ஹிந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தெலுங்கில் ஆ ஒக்கட்டி அடக்கு படத்தில் பாலிவுட் காமெடி நடிகர் ஜேமி லிவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா படத்தில் நாயகியான ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் வில்லனாக சயீஃப் அலி கான் நடித்து வருகிறார். சயீஃப் அலி கான் நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அனிமல் படத்தின் மூலமாக பிரபலமடைந்த வில்லன் நடிகர் பாபி டியோல், சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் திஷா படானி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாளத்தில் உருவாகி வரும் "விருஷபம்" படத்தில் பாலிவுட் நடிகை ஷனாயா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











