இந்த வாரம் நாமினேஷன்ல எத்தனை பேருன்னு பாருங்க.. அதிக ஓட்டு வாங்கிய அந்த 2 போட்டியாளர்கள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமிஷேனில் 7 போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த வாரம் எவிக்ஷன் புராசஸ் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் திங்கள் கிழமை தோறும் எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

சுச்சிதான் டாப்

சுச்சிதான் டாப்

அதன்படி இந்த வாரம் நாமினேஷனில் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமிஷேன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி பட்டியலில் அதிக ஓட்டுக்களை பெற்று சுச்சி டாப்பில் உள்ளார். சுச்சி மொத்தம் 9 ஓட்டுகளை பெற்றுள்ளார்.

நான் சிங்கில்..

நான் சிங்கில்..

சுச்சியை ஷிவானி, நிஷா, சோம், ரமேஷ், அர்ச்சனா, சம்யுக்தா, ரியோ, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்தனர். சுச்சி பிரச்சனைகளை கிரியேட் செய்கிறார். நான் சிங்கில் உள்ளார் பல காரணங்களை கூறி ஹவுஸ்மெட்ஸ் அவரை நாமினேட் செய்தனர்.

இரண்டாவது டாப்பர்

இரண்டாவது டாப்பர்

அவருக்கு அடுத்தப்படியாக அனிதா சம்பத் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார். அனிதாதான் இரண்டாவது டாப்பராக 8 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை ஷிவானி, நிஷா, அர்ச்சனா, ரம்யா, ரமேஷ், சம்யுக்தா, கேபி, ரியோ ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்தனர்.

தலா 2 ஓட்டுகளுடன்

தலா 2 ஓட்டுகளுடன்

அவர்களை தொடர்ந்து, ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம், ஆரி ஆகிய 5 பேரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 5 பேரும் தலா 2 ஓட்டுகளை பெற்றுள்ளனர்.

ஜஸ்ட் மிஸ்

ஜஸ்ட் மிஸ்

அர்ச்சனா, சனம், ரமேஷ் ஆகியோர் தலா ஒரு ஓட்டை பெற்றனர். நாமினேஷனுக்கு வர குறைந்தது 2 ஓட்டுகளை பெற வேண்டும் என்பதால் அவர்கள் லிஸ்ட்டில் இடம்பெறவில்லை. ஆஜித் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவரது பெயரை யாரும் கூறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X