இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் இந்த வாரம் 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று திங்கள் கிழமை என்பதால் பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

7 பேர் நாமினேஷன்

7 பேர் நாமினேஷன்

கடந்த வாரம் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் டேஞ்சர் ஸோனில் இருந்த ஜித்தன் ரமேஷ், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதால் நாமினேஷன் புராசஸில் இருந்து தப்பித்தார். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் 7 பேர் சக ஹவுஸ்மேட்ஸால் நாமினேட் செய்யப்பட்டனர்.

பாலாவின் ஷேடோ ஷிவானி

பாலாவின் ஷேடோ ஷிவானி

அதன்படி அதிக ஓட்டுக்களை பெற்று ஷிவானி நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார். அவரை, அர்ச்சனா, ஆரி, கேபி, அனிதா, நிஷா, ஆஜித் ஆகி 6 பேரும் நாமினேட் செய்தனர். அவர் பாலாவின் ஷேடோவில் இருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த காரணத்தை மறந்துவிட்டதாகவும் பல்வேறு காரணங்களை கூறினார்.

தயக்கம் காட்டுகிறார்

தயக்கம் காட்டுகிறார்

ஷிவானியை தொடர்ந்து 4 ஓட்டுக்களை பெற்று ஆஜித் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார். அவரை சனம், ரம்யா, அனிதா, ஆரி ஆகிய 4 பேரும் நாமினேட் செய்தனர். ஆஜித், ஒப்பினியனை முன் வைக்க தயக்கம் காட்டுகிறார் என்றும் இன்னும் விளையாட்டுத்தனமாக இருக்கிறார் என்றும் காரணங்களை முன் வைத்தனர்.

பேக்கேஜ் வச்சுருக்கார்

பேக்கேஜ் வச்சுருக்கார்

தொடர்ந்து ஆரியும் 4 ஓட்டுக்களை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தார். பாலா உட்பட அவரது கேங்கை சேர்ந்த ஷிவானி, ரம்யா, ஆஜித் ஆகிய 4 பேரும் ஆரியை நாமினேட் செய்தனர். அவர் பேக்கேஜை வைத்திருக்கிறார், அவர் கோபத்தின் வெளிப்பாடு பயமுறுத்துவதாக உள்ளது என்றும் காரணங்களை கூறினர்.

ஹர்ட் பண்றாங்க

ஹர்ட் பண்றாங்க

தொடர்ந்து ரம்யா பாண்டியனும் இந்த வார நாமினேஷனினல் இடம் பிடித்துள்ளார். நிஷா, ரமேஷ் , ரியோ ஆகிய 3 பேரும் ரம்யாவை நாமினேட் செய்தனர். அவர் சிரிச்சுக்கிட்டோ சிலரை ரொம்பவே ஹர்ட் பண்ணுவதாகவும், ரியோ பேசியதை பாலாவிடம் போய் சொன்னதையும் காரணங்களாக கூறினார்.

தலா 2 ஓட்டுக்கள்

தலா 2 ஓட்டுக்கள்

மேலும் சனம், நிஷா, அனிதா ஆகிய 3 பேரும் தலா 2 ஓட்டுக்களை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். சனம் ஷெட்டியை, அர்ச்சனா மற்றும் சோம் ஆகியோர் நாமினேட் செய்தனர்.

யார் வெளியேறுவார்?

யார் வெளியேறுவார்?

நிஷாவை ரமேஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் நாமினேட் செய்தனர். இதேபோல் அனிதாவை ரியோ மற்றும் கேபி ஆகியோர் நாமினேட் செய்தனர். இன்று நடைபெற்ற நாமினேஷனை பார்த்த ரசிகர்கள், நிச்சயமாக ஷிவானியை அனுப்ப மாட்டார்கள்.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil
நிஷாவுக்கும் ஆபத்து

நிஷாவுக்கும் ஆபத்து

கன்டென்ட்டுக்காக நிச்சயம் ஷிவானியை வைத்துக் கொள்வார்கள் என்றும் ஆஜித்தை வேண்டுமானால் வெளியே அனுப்பலாம் என்றும் அவரால் ஒரு கன்டென்ட்டும் கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும் நிஷாவும் நாமினேஷனில் இருப்பதால் அவரை வெளியேற்றவும் வாய்ப்புள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இவர்தான் வெறியேறுவாரா?

இவர்தான் வெறியேறுவாரா?

ஆனால் நிஷா, விஜய் டிவியின் புராடெக்ட் என்பதால் அவரை அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகையால் ஆஜித் வெளியேறவே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும் இருந்த போதும் யாராவது கடைசி நேரத்தில் சிக்கினால் அவர்தான் இந்த வாரம் வெளியேறுவார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X