இந்த வாரம் இவர்தான் அவுட்டா? நாமினேஷனில் இடம் பெற்ற அந்த 7 பேர்.. யாருன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் 7 பேர் நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் இன்றைய எபிசோடில் நடைபெற்றது.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

இதுவரை கன்ஃபெஷன் ரூமில் ரகசியமாக நாமினேஷன் புராசஸ் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த வாரம் இந்த சீசனில் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.
இதில் லிவிங் ஏரியாவில் அனைத்து ஹவுஸ்மேட்ஸகளும் அமர்ந்திருக்க சிறப்பாய் நடந்தது நாமினேஷன் புராசஸ்.

ஆரி நாமினேஷன்

ஆரி நாமினேஷன்

இதில் முதல் நபராய் பிளாஸ்மா டிவி முன்பு வந்த ஆரி. ஆஜித் இன்னமும் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை என்று கூறி அவரது பெயரை நாமினேட் செய்தார். அடுத்ததாக ரியோவின் பெயரை நாமினேட் செய்த ஆரி, ரியோ இன்னும் வெளியே வரலன்னு தோனுது, அவரை கேமை கவனிக்கவில்லை என்ற காரணங்களை கூறினார்.

ரியோ நாமினேஷன்

ரியோ நாமினேஷன்

அடுத்து வந்த ரியோ ஆரியின் பெயரை நாமினேட் செய்து அவர், மத்தவங்கள திருத்துறதுல தான் முனைப்பா இருக்காரு, வார்த்தைகளால் மற்றவர்களை பிரேக் பண்ணுகிறார் என்று காரணம் கூறினார். அடுத்த நபராக பாலாவை நாமினேட் செய்த ரியோ அவர் தற்போது மாறிவிட்டார், ஆனால் கேம்மில் யாரும் மாறக்கூடாது என்கிறார் என்றார்.

பாலா நாமினேஷன்

பாலா நாமினேஷன்

அடுத்து வந்த பாலா, முதல் நபராய் அர்ச்சனாவை நாமினேட் செய்தார். ஆடியன்ஸ் இன்ஃபுளுயன்ஸ ஆயிடக்கூடாது என்பதற்காக ஜித்தன் ரமேஷ் நாமினேஷன் குறித்து பேசிய அர்ச்சனா, ரோபோ டாஸ்க்கில் வேறொருவர் பெயரை சொன்னார். தப்புன்னு சொல்லிட்டு செய்தார் என்றார். அடுத்து
ரியோவை நாமினேட் செய்த பாலா, சொல்லும் கருத்தை தவறாக புரிந்துக்கொண்டு தவறாய் பதில் சொல்வதால் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

அனிதா நாமினேஷன்

அனிதா நாமினேஷன்

அவரை தொடர்ந்து வந்த அனிதா ஆஜித்தை நாமினேட் செய்து அவருக்கு கேம்மில் கான்சென்ரேஷன் கம்மியாக இருப்பதாக கூறினார். அடுத்ததாய் சோமை நாமினேட் செய்த அனிதா அவர் திடீர் திடீர்னு கோபப்படுவதாகவும் கேம்மில் ஃபேவரிட்டிஸம் காட்டுவதாகவும் கூறினார்.

கேபி நாமினேஷன்

கேபி நாமினேஷன்

தொடர்ந்து வந்த கேபி அனிதா எல்லா விஷயத்தையும் பர்சனலாக எடுத்துக்கொள்வதாக கூறி அவரை நாமினேட் செய்தார். தொடர்ந்து ஷிவானியை நாமினேட் செய்த கேபி, பார்ட்டிசிபேஷன் கம்மியாக இருப்பதாககூறினார்.

ஷிவானி நாமினேஷன்

ஷிவானி நாமினேஷன்

அடுத்து வந்த ஷிவானி, அர்ச்சனாவை நாமினேட் செய்தார். அர்ச்சனா மற்றவர்கள் செய்வதை தவறு என்று கூறிவிட்டு தானே அந்த தப்பை செய்கிறார் என்றார். மேலும் சோம் பெயரை நாமினேட் செய்த ஷிவானி அவர், சோலோவாக விளையாட வேண்டும்ட என்றார்

சோம் நாமினேஷன்

சோம் நாமினேஷன்

அடுத்து வந்த சோம் முதல் நபராய் ஷிவானியை நாமினேட் செய்தார். ஷிவானி தனியாக விளையாடவில்லை. அவர் தனியாக விளையாட வேண்டும் என்று கூறினார். அடுத்த அனிதாவின் பெயரை நாமினேட் செய்த சோம், அனிதா ஃபேவரிட்டிஸம் காட்டுவதாக கூறியதில் உண்மையில்லை என்று கூறினார்.

அர்ச்சனா நாமினேஷன்

அர்ச்சனா நாமினேஷன்

அவரை தொடர்ந்து வந்த அர்ச்சனா முதலில் அனிதா பெயரை நாமினேட் செய்தார். அனிதா 70 நாள்ல தன்னை இழந்துட்டாங்கன்னு தோனுது. இந்த கேம்மை குதிரை போல் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார் என்றார். இரண்டாவதாக ஆரியின் பெயரை நாமினேட் செய்த அர்ச்சனா
ஆரி எல்லோருடைய குறைகளை மட்டுமே பார்ப்பதாக கூறினார்.

ஆஜித் நாமினேஷன்

ஆஜித் நாமினேஷன்

அடுத்த வந்த ஆஜித், ஷிவானியின் பெயரை நாமினேட் செய்தார். ஷிவானிக்கு இன்வால்வ்மென்ட் கம்மியாக இருப்பதாக கூறினார். இரண்டாவதாக அர்ச்சனாவை நாமினேட் செய்த ஆஜித், அர்ச்சனா கால் டாஸ்க்கில் ஒன்றும் கமலிடம் ஒன்றும் என மாத்தி மாத்தி பேசியதற்காக நாமினேட் செய்வதாக கூறினார்.

ரம்யா நாமினேஷன்

ரம்யா நாமினேஷன்

ஆஜித்தின் காரணத்தை கேட்ட பிக்பாஸ், நீங்கள் சொன்ன காரணம் எனக்கே கன்பியூஸிக்காக உள்ளது. தெளிவாக சொல்லுங்கள் என்றார். அடுத்து வந்த ரம்யா, ஷிவானி தனது ஒப்பினியனை கூறுவதே இல்லை என்று அவரது பெயரை நாமினேட் செய்தார். மேலும் ரியோ எதிரணிக்கு ஆதரவாய் விளையாடினார் எமோஷன் ஓவர் டேக்கில் உள்ளார் என அவரை நாமினேட் செய்தார்.

லிஸ்ட்டில் 7 பேர்

லிஸ்ட்டில் 7 பேர்


மொத்தத்தில் ஷிவானி 4 ஓட்டுகளுடனும், ரியோ, அனிதா மற்றும் அர்ச்சனா தலா 3 ஓட்டுகளுடனும், ஆரி, ஆஜித், சோம் ஆகிய 3 பேர் தலா 2 ஓட்டுகளுடனும் நாமினேஷனில் இடம்பெற்றனர். ரம்யா கேப்டன் என்பதால் அவர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்தார்.

யார் வெளியேறுவார்?

யார் வெளியேறுவார்?

இந்த வாரம், ஆரி, அர்ச்சனா, ரியோ, அனிதா என பெரியதலைகளுடன் சோம், ஆஜித், ஷிவானி ஆகியோரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் ஆஜித் அல்லது சோம் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மூவரில் ஒருவர்

மூவரில் ஒருவர்

அதே நேரத்தில் அர்ச்சனா மீது ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளதால் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக அர்ச்சனா, சோம், ஆஜித் ஆகிய மூவரில் நிச்சயம் ஒருவர் வெளியேறுவது உறுதி என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X