7 ஹீரோ, ஹீரோயின்..7 பாடல்கள்... 70நாள் படப்பிடிப்பு... 7ம்தேதி ரிலீஸ்- ஒரு சென்டிமெண்ட் படம்
சென்னை: எல்லா விஷயங்களிலும் இந்த சென்டிமெண்ட் பீதி கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் சினிமாவில் கேட்கவே வேண்டாம்.
நல்ல கதையை நல்லபடியாக எடுத்தால் படம் ஓடும், இல்லையென்றால் தியேட்டரை விட்டு ஓடும் என்பதை விட்டுவிட்டு ஏதாவது சென்டிமெண்டில் படம் ஓட வேண்டும் என நினைப்பில் பலர் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
7ம் நம்பர் செண்டிமெண்டில் படத்தில் எல்லாமே 7ல் வரும்படியாக தயாராகிறது ஒரு திரைப்படம்.

பூஜை 7ம் தேதி...
சமீபத்தில் 'காணும் கனவுகள்' என்ற படத்தை ஏப்ரல் ஏழாம் தேதி பூஜை போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹீரோ, ஹீரோயின்ஸ் 7...
படத்தில் மொத்தம் ஏழு நாயகர்கள், ஏழு நாயகிகள் நடிக்கிறார்கள்.

பாட்டும் 7...
படத்தில் இடம்பெறும் பாடல்களும் மொத்தம் ஏழு.

படப்பிடிப்பு 70 நாளில்...
எழுபது நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ரிலீச் 7ம் தேதி...
செப்டம்பர் ஏழாம் தேதி படத்தை வெளியிடவும் முயற்சி நடக்கிறது.

டைட்டில் 8 எழுத்தில்...
ஆனால் படத் தலைப்பை மட்டும் ஏன் எட்டு எழுத்தில் வைத்தார்கள் என்று தெரியவில்லை.

முக்கிய ஹீரோ...
இதில் முக்கிய கதாநாயகனாக நிர்மல் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.எஸ். சங்கர்.


Click it and Unblock the Notifications











