twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 முறை தேசிய விருது...வைர வரிகளால் பாடல்களில் முத்து பதித்த வைரமுத்து பிறந்தநாள்

    |

    சென்னை : கவிப்பேரரசு என திரையுலகினரால் போற்றி, புகழப்படும் கவிஞர் வைரமுத்து இன்று தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 1953 ம் ஆண்டு ஜுலை 13 ம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தவர் வைரமுத்து.

    சார்பட்டா பரம்பரை.. வேற லெவல் ட்ரெயிலர்.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஹார்டுவொர்க்.. கொண்டாடும் ஃபேன்ஸ்! சார்பட்டா பரம்பரை.. வேற லெவல் ட்ரெயிலர்.. ஒவ்வொரு ஃபிரேம்லேயும் ஹார்டுவொர்க்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

    தனது கவிதை வரிகளுக்காக சாகித்ய அகாடமி, கலைமாமணி, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 7 முறை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் வைரமுத்து. வைரமுத்துவிற்கு தேசிய விருது பெற்று தந்த படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    முதல் மரியாதை

    முதல் மரியாதை

    சிவாஜி, ராதா நடித்த முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்காக எழுதிய வரிகளுக்காக முதல் முதலில் தேசிய விருதினை பெற்றார் வைரமுத்து. பாரதிராஜா இயக்கிய இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக அமைந்தன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான உணர்வை வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தன.

    ரோஜா

    ரோஜா

    மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் தனித்துவமானவை. மணிரத்னத்தின் பல படங்களுக்கு வைரமுத்து பாடல் எழுதி இருந்தாலும் ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடல் ஸ்பெஷலான ஒன்று.

    கருத்தம்மா - பவித்ரா

    கருத்தம்மா - பவித்ரா

    1994 ல் கருத்தம்மா, பவித்ரா படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதினார். கருத்தம்மா படத்திற்காக எழுதிய போறாளே பொன்னுத்தாயி பாடலும், பவித்ரா படத்திற்காக எழுதிய உயிரும் நீயே பாடலும் கேட்போரின் மனதை கரைய வைப்பதாக அமைந்தது.

    சங்கமம்

    சங்கமம்

    அர்த்தமுள்ள, உணர்ச்சிகரமான வரிகளே வைரமுத்துவின் சிறப்பு. இவர் எழுதிய மெலடி பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்காததாகும். அவற்றில் சங்கமம் படத்தில் இடம்பெற்ற முதல் முறை கிள்ளி பார்த்தேன் பாடலும் ஒன்றாகும். இளைஞர்களின் ஆழ்மனதில் உள்ள காதல் உணர்வை சொல்வதாக இந்த பாடல் அமைந்திருந்தது.

    கன்னத்தில் முத்தமிட்டால்

    கன்னத்தில் முத்தமிட்டால்

    மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளின் ஆழத்திற்கு மற்றொரு சான்றாகும். ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தாய் - மகள், தந்தை - மகள் இடையேயான பாசப்பிணைப்பை சொல்வதாக அமைந்தது.

    தென்மேற்கு பருவக்காற்று

    தென்மேற்கு பருவக்காற்று

    விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு மிகப் பெரிய திருப்புமுனை தந்த படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தில் இடம்பெற்ற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடல் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. வைரமுத்து எழுதிய இந்த பாடல் வரிகள் பெரிய அளவில் பேச வைத்தது.

    தர்மதுரை

    தர்மதுரை

    சீனு ராமசாமி - வைரமுத்து கூட்டணியில் வெற்றி பெற்ற படம் தர்மதுரை. ரொமான்டிக் மெலடி பாடலான எந்த பக்கம் பாடல் வைரமுத்துவிற்கு மற்றொரு தேசிய விருதினை பெற்றுத் தந்தது. 2016 ல் வெளியான இந்த படம் மனதை மயக்கும் பாடல்களை பெற்றிருந்தது.

    English summary
    Vairamuthu is fondly called Kavi Samrat and lyricist celebrates his 68th birthday today. Vairamuthu has won the National Film Award for best lyricist seven times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X