ராஜு பாய் ‘அஞ்சான்‘ 7 ஆண்டு நிறைவு… இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!

சென்னை : அஞ்சான் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது வரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்கள் #7YearsOfAnjaanSupremacy என்ற ஹாஷ்டாக் உடன் பதிவிடப்பட்டுள்ளன.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்சியல் திரைப்படமாக இப்படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லிங்குசாமி

லிங்குசாமி

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படம் அஞ்சான். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து இருந்தார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

அஞ்சான் மாஸ்டர் பீஸ்

அஞ்சான் மாஸ்டர் பீஸ்

கதை என்னமோ நாம் பல வருடங்களுக்கு பாட்ஷா படத்தில் பார்த்த அதே மும்பை தாதா கதை தான். எத்தனை முறை தாதா கதையை பார்ப்பது என்று கடுப்பானவர்களுக்கு ராஜு பாய் மட்டும் தான் பெரிய ஆறுதலாக இருந்தார். அந்த டூத் பிக் சூர்யாவை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். அவரை வடிமைத்தது இயக்குனரோ, காஸ்ட்யூமரோ, மேக்கப் மேனோ, ஆர்ட் டைரக்டரோ, யாராகவும் இருக்கட்டும். சூர்யாவின் கெட்டப்புகளில் அஞ்சான் மாஸ்டர் பீஸ் திரைப்படம். திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன போதும் இன்றும் அந்த கதாபாத்திரம் பேசப்படுவதற்கு அந்த கெட்டப்பே காரணம்.

அதிரடி ஆக்ஷன் படம்

அதிரடி ஆக்ஷன் படம்

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலக அளவில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவான அஞ்சான் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் அந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.

நண்பனை கொன்றவர்களை

நண்பனை கொன்றவர்களை

துரோகத்தால் நண்பனை கொன்றவர்களை அதே துரோகத்தில் அழிக்க, அண்ணன் ராஜுபாயை தேடி மும்பைக்கு வருகிறார் தம்பி சூர்யா. ராஜுபாயின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக அவர் தேடிச் சென்று விசாரிக்க விசாரிக்க, அண்ணனை பற்றிய தகவல்களை கொட்டுகிறார்கள் அவர்கள். ஒருகட்டத்தில் அந்த ராஜுபாயே அவர்தான் என்று தெரியவருகிறது எதிரிகளுக்கு. ஒரு சில காட்சிகளில் ட்வீஸ்டுகளை வசமாக வைத்து அற்புதமான கதை களத்தை நகர்த்தி இருக்கிறார் லிங்குசாமி.

#7YearsOfAnjaanSupremacy

#7YearsOfAnjaanSupremacy

இந்நிலையில் அஞ்சான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். தற்போது வரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்கள் #7YearsOfAnjaanSupremacy என்ற ஹாஷ்டாக் உடன் பதிவிடப்பட்டுள்ளன.

இந்தியில் வரவேற்பு

இந்தியில் வரவேற்பு

இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல இந்திலும் டப்பிங் செய்யப்பட்டு 'கடார்நாக் கில்லாடி 2' என்ற பெயரில் யூடியூப் வெளியிடப்பட்டது. இந்த டப்பிங் எதிர்பார்த்ததை விட வரவேற்பைப் பெற்று 140 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X