“என்னை அறிந்தால்“ என்னை அறிந்தால் தான்யா.. 7 வருஷமாகியும் இன்றும் மாஸ் காட்டும் படம்!

சென்னை : கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்பெஷல் போலீஸ் கதைகளில் மற்றுமொரு அத்தியாயம் தான் என்னை அறிந்தால்.

இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

இதனை அஜித்தின் ரசிகர்கள்#7YearsOfYennaiArindhaal என்ற ஹேஸ்ட்ராக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

கௌதம் மேனன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி வெளியானத் திரைப்படம் என்னை அறிந்தால். இத்திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மாஸ் திரைப்படம்

மாஸ் திரைப்படம்

கௌதம் மேனன் சொல்லும் போலீஸ் அதிகாரியின் கதைகளில் என்னென்ன வழக்கமான அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் அடங்கிய கதை தான் என்னை அறிந்தால். நேர்மையான அதிகாரி, மோசமான வில்லன், ஏற்கெனவே திருமணமான ஹீரோயின், வன்முறைகளின் உச்சமான மோதல்கள்... அத்தனையும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் பார்க்கலாம்.

விக்டராக மிரட்டிய அருண்விஜய்

விக்டராக மிரட்டிய அருண்விஜய்

இப்படத்தில் அஜீத்துக்கு இணையான முக்கியத்துவம் வில்லனான அருண் விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் அருண்விஜயின் விக்டர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. என்னை அறிந்தால் திரைப்படம் அருண் விஜயின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை முடிவடைந்ததை அருண்விஜய் மற்றும் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் கௌதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விக்டர் பிறப்பை கொண்டாடுகிறோம். அஜித் அவர்களுக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் அருண்விஜய் பதிவிட்டுள்ளார். அஜித்தின் ரசிகர்கள்#7YearsOfYennaiArindhaal என்ற ஹேஸ்ட்ராக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X