Jackie Chan: 70 வயதில் ஜாக்கி சான் எப்படி இருக்காரு பாருங்க.. மனசே ரொம்ப கஷ்டமா இருக்கே!
சென்னை: அடுத்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி வந்தால் ஜாக்கி சானுக்கு 70 வயது பூர்த்தியாகி விடும். இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. எப்போதுமே சிரித்த முகத்துடன் யங் அண்ட் எனர்ஜெடிக்காக பார்த்து ரசித்த சிறு வயது சூப்பர் ஹீரோ ஜாக்கி சான் இப்போ வயதான நிலையில், அதற்கேற்ற தோற்றத்தில் அவர் இருக்கும் புகைப்படம் உலகளவில் வேகமாக பரவி வருகிறது.
சிறு வயதில் விஜய் டிவியில் அதிரடி திருவிழா என ஜாக்கி சான் நடித்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

ரஜினிகாந்த் சும்மா பறந்து பறந்து அடிக்கிறது எல்லாமே இவரை பார்த்து வந்தது தானா? என்றே யோசிக்கத் தூண்டும் அளவுக்கு சண்டைக் காட்சிகளை சுவாரஸ்யமாக ஒருவரால் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஜாக்கி சான்.
70 வயசு ஆகப் போகுது: 1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் எனும் இடத்தில் பிறந்தவர் தான் ஜாக்கி சான். ஆரம்பத்தில் புரூஸ் லீ நடிப்பில் வெளியான படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கிய ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்கி சான் அதன் பின்னர் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் சீனா முதல் ஹாலிவுட் வரை தனது அசுரத்தனமான ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த நடிப்புத் திறமையால் உலக சூப்பர் ஸ்டாராக மாறினார். 69 வயதை கடந்து அடுத்த மாதம் வந்தால் 70 வயதாகி விடும் நிலையில், ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை சற்றே அதிர்ச்சியாக்கி உள்ளது.

புரூஸ் லீ படத்தில்: 1962ம் ஆண்டு வெளியான 'பிக் அண்ட் லிட்டில் வாங் டின் பார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஜாக்கி சான் 10 வருடம் கழித்து 1972ல் புரூஸ் லீ நடிப்பில் வெளியான ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்தார். அடுத்த ஆண்டு வெளியான என்டர் தி டிராகன் படத்திலும் புரூஸ் லீ உடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் பல குங்ஃபூ படங்களில் நடித்து வந்த அவர், 1980ம் ஆண்டு வெளியான டிரங்கன் மாஸ்டர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.

வேறலெவல் ஸ்டன்ட்: சண்டைக் காட்சிகள் என்றதும் ஹீரோ "நானும் மதுரைக்காரன்டா" என கத்திக் கொண்டும், "புஹா.. புஹா" என சத்தம் போட்டுக் கொண்டும் ஃபைட் சீன் வந்தாலே ரசிகர்கள் வெளியே தம் அடிக்க செல்வதுமாக இல்லாமல், ஜாக்கி சான் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வரவழைத்தன. ஸ்டன்ட் நடிகர்கள் எந்தளவுக்கு உயிரை பணையம் வைத்து நடிக்கின்றனர் என்பதையும் கடைசியாக படம் முடிந்த பின்னர் ப்லூப்பராக வெளியிட்டு ரசிக்க வைத்தவர் ஜாக்கி சான்.

உலக சூப்பர் ஸ்டார்: புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜெட்லீக்கு பிறகு சீன சினிமாவில் இருந்து பெரிதாக உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர்கள் என்றால் அதிகம் பேருக்கு சரியாக நடிகர்களின் பெயர்கள் கூட தெரியாது. ஹாலிவுட்டே வேண்டாம் என சீனா தனது படங்களில் தங்கள் நாட்டினர் பார்த்தாலே போதும் என எடுத்துக் கொண்டு இருக்கிறது. பல தடைகளை உடைத்தெறிந்து உலகளவில் பிரபலமான ஜாக்கி சான் 70 வயதில் தள்ளாடும் நிலையில் இருக்கும் போட்டோ ரசிகர்களை மனதளவில் கஷ்டப்படுத்தி வருவதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். முன்னதாக ஜெட்லீயின் வயதான புகைப்படமும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications