Filmfare: தனுஷ் உடன் அது நடந்து 13 வருஷம் ஆச்சு.. மறைமுகமாக அந்த நடிகரின் ரசிகர்களுக்கு ஊமைகுத்து கொடுத்த SK
சென்னை: 70 வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது கேரளாவில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழுக்கான சிறந்த நடிகர் என்ற விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். இவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படமான அமரன் படத்திற்காக வழங்கப்பட்டது. விருதை வாங்கிய பின்னர் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அது குறித்து பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், " இந்த ஃபிலிம் ஃபேர் விருது தான் எனது முதல் விருது. நான் முதன்முதலாக தனுஷ் சாருடன் தான் ஃபிலிம் ஃபேர் அவார்டுக்கு வந்தேன். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன். அவர் தான் என்னை சும்மா வா ஜாலியாக போய்விட்டு வருவோம் என்று கூறினார். அப்போது எனக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. எனக்கு முதல் வரிசையில் சீட் ஒதுக்க 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. அமரன் படம் கோவா திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட போது, 'அமரன் எனக்கு மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே உள்ளது. அது எனக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் என்று கூறினேன்.
அதேபோல் அமரன் எனக்கு கொடுத்துக் கொண்டே உள்ளது, அதற்கு காரணமான முகுந்த் வரதராஜன் சாரின் குடும்பத்தினருக்கு நன்றி. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்த படத்திற்காக நான் கமல் சாரின் அலுவலகத்திற்கு சென்றபோது, அவரது அலுவலகத்தில் எக்கச்சக்கமான ஃபிலிம் ஃபேர் விருதுகள் இருந்தது. அதைப் பார்த்த போது, அமரனுக்காக எனக்கு கிடைக்கும் என்று நினைத்தேன். அதேபோல் கிடைத்துள்ளது.

அமரன்: நான் மிகவும் சீரியஸான ஆள் எல்லாம் இல்லை, மிகவும் ஜாலியான நபர். அமரன் படத்தை பார்த்துவிட்டு, நீ ஏன் இவ்வளவு சீரியஸான படத்தில் நடித்தாய் என்று யாருமே கேட்கவில்லை. மாறாக அனைவரும் என்னை பாராட்டினார்கள். அனைவருக்கும் நன்றி.
ரசிகர்கள்: முக்கியமாக எனது ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை எவ்வளவு அடித்து துவைத்தாலும், மிதிச்சாலும் என்னைத் தொடர்ந்து தூக்கி, தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்காக ரொம்பவும் நன்றிகள். உங்களுக்கு பிடித்த சிவாண்ணா இன்னைக்கு ஃபிலிம் ஃபேர் அவார்டு உடன் நின்று கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார். மற்றவர்கள் தன்னை அடித்து துவைத்தாலும் என்று குறிப்பிடுவது பராசக்தி படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை மோசமாக விமர்சித்தது குறித்து தான் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் என்று இணையவாசிகள் கூறுகிறார்கள்.

சிம்ரன்: அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு விருது வழங்கிய நடிகை சிம்ரன் தனக்கும் அமரன் படம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். சிம்ரன் இவ்வாறு சொல்லி எனக்கு இந்த விருதைக் கொடுத்தது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.


Click it and Unblock the Notifications