National Awards: லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலைக்கு ஒரு தேசிய விருது கூட இல்லை.. அசத்திய ஹனுமான்!

சென்னை: திரைப்படத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேசிய விருதுகள் தாமதமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தேசிய விருது அறிவிப்பு வெளியானது.

71வது தேசிய விருதுகள் அறிவிப்பு விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான், ரன்பீர் கபூர் நடித்த அனிமல், விக்ராந்த் மசாய் நடித்த 12த் ஃபெயில் உள்ளிட்ட படங்கள் தேசிய விருதுகளை வென்றன.

71st National Awards Leo PS2 Viduthalai 1 missed the Awards

தமிழில் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடித்த பார்க்கிங் படத்துக்கு சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதையாசிரியர் மற்றும் சிறந்த துணை நடிகர் என 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் 2வுக்கு ஒரு விருதும் இல்லை: மணிரத்னம் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 70வது தேசிய விருது விழாவில் 4 தேசிய விருதுகளை வென்று அசத்தியது. சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த தமிழ் படம் என 4 விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், அதன் தொடர்ச்சியாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வசூலில் அடிவாங்கிய நிலையில், தேசிய விருதுகள் அறிவிப்பிலும் தற்போது ஒரு பிரிவில் கூட விருது பெறவில்லை.

லியோவுக்கு பதில் ஹனுமான்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹைனாவுடன் சண்டையிடும் காட்சிக்காக தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறந்த அனிமேஷன் பிரிவில் அந்த விருதை தெலுங்கு திரைப்படமான ஹனுமான் தட்டிச் சென்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை பகவந்த் கேசரி தட்டிச் சென்றுள்ளது. அந்த படத்தை தான் விஜய் ஜன நாயகன் என ரீமேக் செய்து நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்துக்கும் இல்லை:2023ம் ஆண்டு வெளியான வாரிசு, துணிவு, மாவீரன், வாத்தி, போர் தொழில் உள்ளிட்ட படங்களை போலவே இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் நடிப்பில் வெளியான விடுதலை படத்துக்கும் தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால், பார்க்கிங் திரைப்படம் 3 தேசிய விருதுகளை தட்டிச் சென்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பெருமைமிகு தருணமாக மாறியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X