ஷாருக்கான்,ஜிவி பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது..71வது தேசிய விருதுகள் அறிவிப்பு முழு விவரம்!

டெல்லி: இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும், நடிப்பு, இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் தேசிய திரைப்பட விருதுகள். 1973ஆம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. இதில், படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றன. இவற்றில் தெலுங்கு, தமிழ், பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் திரைப்படங்கள் அடங்கும். இயக்கம், நடன அமைப்பு, இசை மற்றும் பலவற்றிற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நடுவர் குழு இறுதி அறிக்கை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகனிடம் இன்று மாலை 4 மணிக்கு சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், நடுவர் குழு உறுப்பினர்கள் பிரிவுகள் வாரியாக வெற்றியாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர். ஜவான் படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதை ஷாருக்கான் முதன் முறையாக வென்றார்.

National Film Awards The Kerala Story 17

தேசிய விருது முழு பட்டியல்:
சிறப்பு குறிப்பு: அனிமல் (ரீ-ரிக்கார்டிங் கலவை)-எம்.ஆர்.ராதாகிருஷ்ணன்
சிறந்த தெலுங்கு படம்: பகவந்த் கேசரி
சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்
சிறந்த பஞ்சாபி படம்: Godday Godday Chaa
சிறந்த ஒடியா படம்: புஷ்கரா
சிறந்த மராத்தி திரைப்படம்: ஷ்யாம்சி ஆயி பெஸ்ட்
மலையாளத் திரைப்படம்: உள்ளொழுக்கு
கன்னட படம்: Kandeelu: The ray of hope
சிறந்த இந்தி படம்: Kathal: A jackfruit of mystery
சிறந்த குஜராத்தி படம்: வாஷ்
சிறந்த பெங்காலி படம்: டீப் ஃப்ரிட்ஜ்
சிறந்த அசாமிய படம்: ரங்கதாபு 1982

பார்க்கிங் 3 விருது:
சிறந்த அதிரடி இயக்கம்: ஹனு மேன் (தெலுங்கு)
சிறந்த நடன அமைப்பு: ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
சிறந்த பாடல் வரிகள்: பாலகம்
சிறந்த இசை அமைப்பாளர்: வாத்தி (தமிழ்)
சிறந்த ஒப்பனை, ஆடை வடிவமைப்பாளர்: சாம் பகதூர்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்: 2018- Everyone is a hero (Malayalam)
சிறந்த எடிட்டிங்: பூக்களம் (மலையாளம்)
சிறந்த ஒலி வடிவமைப்பு: அனிமல்
சிறந்த ஒளிப்பதிவு: கேரளா ஸ்டோரி (இந்தி)
சிறந்த பெண் பின்னணி பாடியவர்: ஜவான்
சிறந்த ஆண் பின்னணி பாடகர்: பேபி
சிறந்த துணை நடிகை: உள்ளொழுக்கு (ஊர்வசி), வாஷ் (ஜானகி)
சிறந்த நடிகர் துணை வேடம்: பூக்களம் (விஜயராகவன்)
பார்க்கிங் (எம்.எஸ்.பாஸ்கர்)
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி
சிறந்த நடிகர்: ஷாருக்கான், விக்ராந்த் மாஸ்ஸி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X