71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தேர்வு!

சென்னை: ஒவ்வொரு ஆண்டும்சினிமாத்துறையில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை மத்திய அரசு தேர்வு செய்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்திய சினிமாத்துறையில் இந்த விருது உயரிய விருதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பல வாரங்களாக நடந்த ஆலோசனைக்கு பிறகு பட்டியலை நடுவர் குழு, தேர்வுக்குழுவிடம் அளித்தது. இதன்படி இந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் வெளியான 'பார்க்கிங்' படம் மூன்று தேசிய விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக இந்த படம் தேர்வாகியது. மேலும், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். பார்க்கிங் படத்தில் நெகட்டிவ் ரோலில் மனித இயல்புகளையும் வன்மம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை பிரதிபலித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

71st national film awards GV prakash 71
Photo Credit: GV prakash instagram

தேசிய விருது: அதே போல, உள்ளொழுக்கு எனும் மலையாள படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த 'வாத்தி' பட பாடலுக்காக சிறந்த இசையப்பாளர் விருதை ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றார். இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட, ஜி.வி. பிரகாஷ், வாத்தி படத்தில் இசை அமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பதற்கு மிக்க நன்றி. இந்த விருதை எனக்காக வழங்கிய அனைத்து ஜூரிக்களுக்கும், கமிட்டிக்கும், உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி: குறிப்பாக வாத்தி திரைப்பட குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை தனுஷ் தான் எனக்கு கொடுத்தார். இது என்னுடைய இரண்டாவது தேசிய விருது, முதல் விருதை சூரரைப்போற்று படத்திற்காக பெற்றோன். இந்த முறை வாத்தி படத்திற்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலமாக என்னுடைய ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்த ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது என ஜிவி பிரகாஷ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X