72-வது தேசிய திரைப்பட விருதுகள்: மூன்று விருதுகளை தட்டித்தூக்கிய அமரன்!

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், தமிழ் திரையுலகை உலுக்கிய 'அமரன்' திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்து வருகிறது.

சிறந்த பின்னணி இசைக்கான விருதைத் தொடர்ந்து, தற்போது ஃபீச்சர் ஃபிலிம்ஸ் (Feature Films) பிரிவில் சிறந்த எடிட்டிங் (Best Editing) க்கான தேசிய விருதை 'அமரன்' படத்தின் எடிட்டர் ஆர். கலைவாணன் (Editor : R Kalaivannan) வென்று அசாத்திய சாதனை படைத்துள்ளார். படத்தின் விறுவிறுப்பான இராணுவக் காட்சிகளையும், உணர்வுப்பூர்வமான காதல் தருணங்களையும் நேர்த்தியாகத் தொகுத்ததற்காக இவருக்கு இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளது.

2nd National Film Awards 2026 Award Amaran 72 2026

சிறந்த இயக்குநர்: ஒட்டுமொத்த இந்தியாவையும் தேசபக்தி மற்றும் எமோஷனல் உணர்வில் உலுக்கிய 'அமரன்' திரைப்படத்தை, எவ்வித சமரசமுமின்றி சர்வதேசத் தரத்தில் இயக்கியதற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு 'சிறந்த இயக்குநர்' கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு விருது: அமரன் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தனது அசாத்திய பின்னணி இசையால் உயிர் கொடுத்து, தியேட்டர்களில் ரசிகர்களின் தேசபக்தி உணர்வைத் தூண்டிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 'சிறந்த பின்னணி இசை'க்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங்: 'அமரன்' படத்தின் விறுவிறுப்பான இராணுவக் போர்க்களக் காட்சிகளையும், நெஞ்சை உருக்கும் காதல் தருணங்களையும் நேர்த்தியாகத் தொகுத்த படத்தின் எடிட்டர் ஆர். கலைவாணனுக்கு 'சிறந்த எடிட்டிங்' கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் 'அமரன்' திரைப்படம் தொழில்நுட்பப் பிரிவுகளில் மட்டும் மொத்தம் 3 தேசிய விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது

Also Read
72வது தேசிய திரைப்பட விருதுகள்: மெய்யழகன், கேப்டன் மில்லர், மகாராஜா படங்களுக்கும் தேசிய விருது!
72வது தேசிய திரைப்பட விருதுகள்: மெய்யழகன், கேப்டன் மில்லர், மகாராஜா படங்களுக்கும் தேசிய விருது!

அமரன்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கீதா கைலாசம் ஆகியோர் நடித்திருந்தனர். சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார் காதலி சாய் பல்லவி. ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை சாய் பல்லவியின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைகிறார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான நடித்து இருப்பார். இந்த படம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X