twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்கிலாந்தின் ஆஸ்கர்.. 74வது பாஃப்டா விருது விழாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? மொத்த லிஸ்ட் இதோ!

    |

    லண்டன்: இங்கிலாந்தின் ஆஸ்கர் என அழைக்கப்படும் பாஃப்டா விருதுகள் கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11ம் தேதி வழங்கப்பட்டன.

    பிரிட்டிஷ் அகாடமி விருதுகள் என்பதை சுருக்கியே பாஃப்டா என அழைத்து வருகின்றனர்.

    மூக்குத்தி அம்மன் படத்தை ஹிட்டாக்க ஆர்.ஜே.பாலாஜி எடுத்துள்ள முடிவால் பரபரப்பு மூக்குத்தி அம்மன் படத்தை ஹிட்டாக்க ஆர்.ஜே.பாலாஜி எடுத்துள்ள முடிவால் பரபரப்பு

    கொரோனா பரவல் காரணமாக 74வது பாஃப்டா விருது விழா நேரடி ஆடியன்ஸ் இன்றி லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் விர்ச்சுவலாகவே நடத்தப்பட்டன.

    விருதுகளை அள்ளிய நோமேட்லேண்ட்

    விருதுகளை அள்ளிய நோமேட்லேண்ட்

    இயக்குநர் க்லோ சாஹோ இயக்கத்தில் பிரான்சஸ் மெக் டொர்மண்ட் நடிப்பில் வெளியான நோமேட்லேண்ட் திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான பாஃப்டா விருது வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் க்லோ சாஹோ தான் தட்டிச் சென்றார். சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக் டொர்மண்ட் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் இந்த படமே தட்டிச் சென்றது.

    சிறந்த நடிகர் – அந்தோனி ஹாப்கின்ஸ்

    சிறந்த நடிகர் – அந்தோனி ஹாப்கின்ஸ்

    தி ஃபாதர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். சிறந்த திரைக் கதைக்கான விருதை பிராமிஸிங் யங் உமன் படமும் சிறந்த தழுவல் கதைக்கான விருதை தி ஃபாதர் படமும் பெற்றது. சிறந்த துணை நடிகைக்கான விருதை மினாரி படத்தில் நடித்த யூ ஜுங் யோன் பெற்றார்.

    டெனெட்டுக்கும் விருது

    டெனெட்டுக்கும் விருது

    இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஏகப்பட்ட டீகோடிங்கை எல்லாம் வைத்து இயக்கிய டெனெட் படத்துக்கு எந்த விருது விழாவிலும் பெரிதாக விருதுகள் கிடைக்கவில்லை. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான பாஃப்டா விருதை டெனெட் படம் பெற்றுள்ளது டெனெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    சிறந்த இங்கிலாந்து திரைப்படம்

    சிறந்த இங்கிலாந்து திரைப்படம்

    அவுட்ஸ்டாண்டின் இங்கிலாந்து திரைப்படத்துக்கான விருதை பிராமிஸிங் யங் உமன் படம் பெற்றுள்ளது. சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான விருதை நார்டிஸ்க் மொழி திரைப்படமான அனதர் ரவுண்ட் பெற்றுள்ளது. மை ஆக்டபஸ் டீச்சர் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nomadland won many awards at 74th BAFTA awards which was held on April 10tth and 11th. Tenet and The Father movies also bagged some awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X