ஜீவி பிரகாஷின் 75வது படம்.. மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி
Recommended Video
சென்னை: வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்க உள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளதாக ஜீவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அது எனது 75வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜீ.வி.பிரகாஷ், வெற்றி மாறனுக்கும் இடையேஇருக்கும் பந்தம் மிக பெரியது.
இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆடுகளம் படத்திற்கும் சிறந்த இசையை ஜீ.வி.பிரகாஷ் கொடுத்து இருப்பார். மேலும் விசாரணை படத்திற்கும் நல்ல பின்னணிஇசையை அமைத்து கொடுத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். சமீபத்தில் வெளிவந்த வந்த அசுரன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்தான்.

தற்போது வெற்றிமாறன் கலைப்புலி தயாரிப்பில் அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதையடுத்து இந்த படத்தில் இசையமைப்பது ஜீவி பிரகாஷ் தான் என்ற தகவலை ஜீவி பிரகாஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை தாண்டி இந்த படத்தில் இருக்கும் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ஜீவி பிரகாஷுக்கு இது 75வது படமாகும் .
ஜீவி.பிரகாஷ் வெயில் படம் மூலம் அறிமுகமாகி இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பயணித்து வருகிறார். பல ஏற்ற தாழ்வுகளை ஜீவி பிரகாஷ் சந்தித்து இருக்கிறார் . 2000த்திற்கு மேல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த ஆல்பங்களில் பல முக்கியமான ஆல்பங்கள் ஜீவி பிரகாஷ் அமைத்தவை தான் .

மேலும் ஜீவி.பிரகாஷ், அடுத்ததாக சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கும் இசையமைக்கிறார். சூர்யாவுடன் ஜீவி இணையும் இரண்டாவது படம் என்றாலும் முன்னணி நடிகரும் முன்னணி இசையமைப்பாளரும் இணையும் போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு ஆன்தாலஜி படத்தை இயக்கி வருகிறார் , அதன் பின் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா சூரைப்போற்று படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைகிறார். ஜீவி.பிரகாஷ் நடிப்பதை குறைத்து மீண்டும் இசையில் கவனம் செலுத்துவது ரசிகர்களை உற்சாகபடுத்தி உள்ளது.



Click it and Unblock the Notifications











