twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    76வது சுதந்திர தினம்... தேசபக்தியை தூண்டிய டாப் 10 தமிழ் சினிமாக்கள்

    |

    சென்னை : இந்திய தேசத்தின் சுதந்திரத்தில் சினிமாவுக்கும் பெரிய பங்கு உண்டு. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சுதந்திர போராட்டங்கள் பற்றி சினிமாக்கள் எடுக்கப்பட்டன. அதேபோல தமிழ்நாட்டில் மக்களிடையே சுதந்திர தின தீயை வளர்த்ததிலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ரஜினி, விஜய், அமீர்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.அவர்களின் ரசிகர்களும் இதை பின்பற்றி வருகின்றனர்.

    இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழில் ஹிட் டாப் 10 தேசபக்தி திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பார் என்பதை சிவாஜி தத்ரூபமாக வாழ்ந்து காட்டி படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959 ம் ஆண்டு ரிலீசான இந்த படமும் சரி, அதில் ஜாக்சன் துரையை எதிர்த்து கட்டபொம்மன் பேசும் வசனமும் தற்போது வரை செம ஹிட். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே அனைவரின் மனதில் சிவாஜியின் முகம் வந்து போகும் அளவிற்கு நீங்கா தடம் பதித்த படம்.

    கப்பலோட்டிய தமிழன்

    கப்பலோட்டிய தமிழன்

    1961 ம் ஆண்டு ரிலீசான கப்பலோட்டிய தமிழன் படம் இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி பேசிய படம். இதில் வ.உ.சிதம்பரனார் ரோலில் சிவாஜி நடித்திருந்தார். இந்த படத்தில் பாரதியாராகவும் தோன்றி அசத்தி இருந்தார் சிவாஜி.

    காந்தி

    காந்தி

    1982 ம் ஆண்டு ரிலீசான காந்தி படம் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது. ரிச்சர்ட் ஆட்டன்பரோடுக்கு உலக அளவில் புகழை தேடித்தந்த படம்.

    ரோஜா

    ரோஜா

    மணிரத்னம் இயக்கத்தில் 1992 ம் ஆண்டு அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ரோஜா. தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட கணவரை இந்திய அரசின் உதவியுடன் போராடி மீட்டு வரும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை தான் இந்த படம். என்றாலும் இந்தியாவின் பெருமையை, தேச பக்தியை அழுத்தமாக சொன்ன படம்.

    ஹேராம்

    ஹேராம்

    கமல் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்த ஹேராம் 2000ம் ஆண்டு ரிலீசானது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காந்தியின் வாழ்க்கை, மகாத்மா காந்தியை கொல்ல நடந்த சதிகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இநு்த படம் ஆஸ்கார் வரை சென்றது.1940 களில் நடப்பது போன்று இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

    பாம்பே

    பாம்பே

    1995 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மற்றொரு தேச பக்தி படம். மும்பையில் இந்து -முஸ்லீம் பிரிவினை, கலவரம் பற்றி பேசிய படம். எத்தனை பிரிவினை இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள் என்பதை ஆழமாக வலியுறுத்திய படம். டாப் 20 இந்திய படங்களின் பட்டியலில் இடம் பிடித்த படம்.

    ஜெய்ஹிந்த்

    ஜெய்ஹிந்த்

    ஆக்ஷன்கிங் அர்ஜூன் நடித்து 1994 ம் ஆண்டு ரிலீசான படம் ஜெய்ஹிந்த், தீவிரவாதிகளால் தனது சகோதரர் கொல்லப்பட்ட பிறகு, தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு, ரகசிய தீவிரவாத அமைப்பை கண்டுபிடித்து அழிக்கும் இளைஞனின் கதை. தற்போது வரை தேச பக்தி என்றாலே முதலில் ஒலிப்பது இந்த படத்தில் இடம்பெற்ற தாயின் மணிக்கொடி பாடல் தான்.

    இந்தியன்

    இந்தியன்

    1996 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகியான சேனாதிபதி, லஞ்சத்திற்கு எதிராக போராடுவதும், அதற்காக தனது மகனையே கொலை செய்யும் கேரக்டரில் கமல் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் முக்கியமான இடத்தை இந்த படம் பிடித்தது. இதன் காரணமாக தற்போது ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகம்க காணப்படுகிறது.

    பாரதி

    பாரதி

    சாயாஜி ஷிண்டே நடிப்பில் 2000 ம் ஆண்டு ரிலீசான படம் பாரதி. மகாகவி சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கையை பற்றிய படம். இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் வென்றது. சாயாஜிஷிண்டே பாரதியாகவே கம்பீரம் காட்டி வாழ்ந்திருந்தார்.

    ஆர்ஆர்ஆர்

    ஆர்ஆர்ஆர்

    ராஜமெளலி இயக்கத்தில் இந்த ஆண்டு ரிலீசான ஆர்ஆர்ஆர் படம் 1920 களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் பற்றிய படம். இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களாக நடித்திருந்தனர்.

    English summary
    Today we celebrate our 76th Independence day. Here we discussed about the tamil films which potrait our Nation. Here we listed out the top 10 portrait films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X