Republic Day 2025: 76வது குடியரசு தினம்.. திரண்டு வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!
சென்னை: இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நாளில் டெல்லியில் முப்படை ராணுவ வீரர்கள் அணிவகுப்புக்கு மத்தியில்,குடியரசுத் தலைவர் கொடியேற்றி உரையாற்றினார். அதே போல தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவி கொடியேற்றி உரையாற்றினார். குடியரசு தினத்தையொட்டி, பல பிரபலங்களும், ரசிகர்களும் மற்றும் சக மக்களும் தங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ம்ஆண்டு, இது தான் நம் நாடு, நமக்கான சட்டத்திட்டங்கள் இது தான் என் நமக்கான அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய நாள் தான் ஜனவரி 26. சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன்: இந்த வகையில் மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியா ஒரு கனவில் கட்டப்பட்டது, அங்கு அமைதிதான் பதில், வன்முறை அல்ல;
இந்தியா ஒரு கனவில் கட்டப்பட்டது, அங்கு நம்பிக்கையை பயமின்றி நடைமுறைப்படுத்த முடியும்;
இந்தியா ஒரு கனவில் கட்டமைக்கப்பட்டது, அங்கு சுதந்திரமாக பேச முடியும்,
இந்தியா ஒரு கனவில் கட்டப்பட்டது, அங்கு இறையாண்மை மக்களுக்கு சொந்தமானது, சக்திவாய்ந்தவர்களுக்கு அல்ல;
இந்தியா ஒரு கனவில் கட்டப்பட்டது, அங்கு அரசியலமைப்பு ஒரு ஆவணம் அல்ல
ஒவ்வொரு நாளும் பிரகாசமாக பிரகாசிக்கும் இந்த நாட்டின் தலைவிதி எங்கள் கூட்டுக் கைகளில் உள்ளது. என பதிவிட்டு அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன்: பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ஹிந்தியில் குடியரசுதின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சுதந்திரம் என்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட என்று குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல பாலிவுட் நடிகரும் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரம் என்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது பொறுப்பும் கூட. நேற்றைய தியாகங்களால் இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம். இந்த சுதந்திரத்தை நமது செயல்களால் போற்றுவோம், இந்தியாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வோம் என பதிவிட்டுள்ளார்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதேபோல, நடிகர் அல்லு அர்ஜூன், ராம்சரண், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஒரு சிறிய வீடியோ பதிவின் மூலம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதே போல பாலிவுட், கோலிவுட் நடிகைகளும் குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து


Click it and Unblock the Notifications











