»   »  நாட்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ரஜினிக்கு 78வது இடம்! #Rajinikanth

நாட்டின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ரஜினிக்கு 78வது இடம்! #Rajinikanth

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் 78வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதன் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

78th place for Rajinikanth in the list of most powerful Indians

அதில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

64வது இடத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, 65வது இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளனர்.

77வது இடத்தில் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன், 78வது இடத்தில் ரஜினிகாந்த், 79வது இடத்தில் தீபிகா படுகோனே, 93வது இடத்தில் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட்டின் பிரபல கான் நடிகர்கள் எனப்படும் ஆமிர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் மூவருமே 80,81,82வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களைவிட ஒரு இடம் முன்பாக அதாவது 79வது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகோன்.

விரைவில் அரசியல் கட்சி அறிவிக்க உள்ளார் ரஜினிகாந்த். எனவே சினிமா தாண்டி அவர் அரசியலில் செல்வாக்குப் பெற்று வருவதையே இந்தப் பட்டியல் காட்டுவதாக அந்த நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

English summary
The much-awaited ie100 List for 2018 is out and like every year it reveals the 100 most powerful Indians. Rajinikanth places 78th in the list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X