7G Rainbow Colony: 7ஜி ரெயின்போ காலனி ரீரிலீஸே இவ்வளவு வசூலா?.. சந்தோஷத்தில் சோனியா அகர்வால்!

ஹைதராபாத்: செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ரவிகிருஷ்ணா நடித்த 7g ரெயின்போ காலனி திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன 7g பிருந்தாவன் காலனி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.

7g ரெயின்போ காலனி தெலுங்கு வெர்ஷன் ரீ - ரிலீசை முன்னிட்டு சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் அந்த படத்தின் ஹீரோ ரவிகிருஷ்ணா இருவரும் ஒன்றாக பேட்டி அளித்தனர்.

7G Rainbow Colony Telugu version re-release collects huge at Day 1 Box Office

செல்வராகவன் - சோனியா அகர்வால்: 7g ரெயின்போ காலனி படத்தை இயக்கிய செல்வராகவனை காதலித்த நடிகை சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில், மன வருத்தம் ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

7g ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கும் முடிவை செல்வராகவன் எடுத்துள்ள நிலையில், 7g என்னும் படத்தில் சோனியா அகர்வால் தனியாக நடித்திருப்பதாக அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

7G Rainbow Colony Telugu version re-release collects huge at Day 1 Box Office

7ஜி ரெயின்போ காலனி தெலுங்கு வெர்ஷன்: இந்நிலையில், 7g பிருந்தாவன் காலனி படத்தை நடிகை சோனியா அகர்வால் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்து அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி உள்ளதாக தற்போது பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 1250 ஷோக்கள் முதல் நாளில் திரையிடப்படுவதாக அறிவித்து இருந்த நிலையில், தற்போது முதல் நாள் வசூல் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையிலும் அதன் கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. முதல் நாள் வசூலாக சுமார் 1.04 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியதாக சோனியா அகர்வால் சந்தோஷ பதிவை போட்டுள்ளார்.

வசூல் வேட்டை: 7g ரெயின்போ காலனி 2 படம் வெளியானாலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என தெரிகிறது. அந்தளவுக்கு இளைஞர்களின் காதல் வாழ்க்கையையும் காதல் பிரிவையும், காதலியின் மறைவையும் அத்தனை யதார்த்தமாக காட்டியிருப்பார் செல்வராகவன்.

ஒரு பெண்ணை இப்படித்தான் உசுருக்கு உசுராக இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்றும், ஊதாரியான பையனை ஒரு பெண்ணின் காதல் நினைத்தால் நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும் என ஏகப்பட்ட விஷயங்களை செல்வராகவன் வைத்திருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X