twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீட்சாவுக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு கிடைத்த மேஜிக் டிக்கெட்.. டிரெண்டாகும் #7yearsofsoodhukavvum

    |

    சென்னை: புதுப்பேட்டையில் ஏரியா மாமாவாக சின்ன ரோலில் நடித்த விஜய்சேதுபதி, பீட்சா படத்தின் மூலம் கோலிவுட்டின் புதிய முகமாக மிரட்டினார்.

    Recommended Video

    4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran

    அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு கிடைத்த மற்றொரு மேஜிக் டிக்கெட் தான் சூது கவ்வும். எப்படி ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுக்கு விஜய்சேதுபதி கொடுப்பாரோ அப்படி அவருக்கு அப்போது கிடைத்த மேஜிக் டிக்கெட் தான் அந்த படம்.

    ப்ப்ப்பா மந்தராவா இது.. ஆள் அடையாளமே தெரியல.. ரசிகர்கள் அதிர்ச்சி !ப்ப்ப்பா மந்தராவா இது.. ஆள் அடையாளமே தெரியல.. ரசிகர்கள் அதிர்ச்சி !

    கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாட்டையே காசு, பணம், துட்டு, மணி, மணி என பாட வைத்த சூது கவ்வும் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளதை விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சூது கவ்வும்

    சூது கவ்வும்

    நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் தனது அசத்தலான குறும்படங்களால் கலக்கி வந்த இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் சி.வி. குமார் தயாரிப்பில் வெளியான படம் தான் சூது கவ்வும். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் என பலரது நடிப்பில் வெளிவந்த பக்காவான பிளாக் காமெடி திரைப்படமாக வெளியாகி வெற்றியடைந்தது.

    நயன்தாராவுக்கு கோயில்

    நயன்தாராவுக்கு கோயில்

    பீட்சா படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு இந்த படத்தில் நல்ல ரோல் கொடுக்கப்பட்டிருக்கும். ஊரை விட்டு சென்னைக்கு வரும் அவருக்கு பின்னால் இருக்கும் பேக் ஸ்டோரி ரசிகர்களை அப்படி ரசிக்க வைத்தது. அதற்கு காரணம் நடிகை நயன்தாராவுக்கு கோயில் கட்டியதால் துரத்திட்டாங்க என கூறும் இடத்தில் ஆரம்பித்த சிரிப்பு சத்தம் கிளைமாக்ஸ் காட்சி வரை நீடித்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

    கடத்தலுக்கு கிளாஸ்

    கடத்தலுக்கு கிளாஸ்

    ஹாலிவுட்டில் வரும் பேட்மேன் வில்லன் ஜோக்கரை போன்றே, வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டு விஜய்சேதுபதியின் தாஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். கிட்னாப் பண்ண என்ன என்ன பண்ண வேண்டும், எப்படி பண்ணினால் மாட்டிக் கொள்ள மாட்டோம், அதிக ரிஸ்க் மற்றும் ஆசை உயிருக்கு ஆபத்து என அவர் சொல்லும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப ஃபிரெஷ்ஷாக இருந்தது ஜி.

    நிழல் ஹீரோயின்

    நிழல் ஹீரோயின்

    சற்றே வயதான நடுத்தர இளைஞன் தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தல அஜித்துக்கு அடுத்தபடியாக, தமிழ் சினிமாவில் புது டிரெண்டை கொண்டு வந்தவர் நடிகர் விஜய்சேதுபதி. மேலும், இந்த படத்தில் அவருக்கு டூயட் பாட ஜோடி இருக்காது. சில சமயங்களில் எச்சரிக்கை செய்யவும், அவரை கிண்டல் அடிக்கவும் நிழல் ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டியின் ரோல் படைக்கப்பட்டிருந்ததும் சுவாரஸ்யமே.

    காசே தான் கடவுளடா

    காசே தான் கடவுளடா

    பேராசை பெருநஷ்டம் என்கிற பழமொழியை பல படங்கள் சொல்லியிருந்தாலும், பீட்சாவை தொடர்ந்து, காசே தான் கடவுளடா என்ற தத்துவத்தை சொல்லும் படமாக சூது கவ்வும் அமைந்திருக்கும். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து எனும் கொள்கையுடன் இருக்கும் அரசியல்வாதியான எம்.எஸ். பாஸ்கரின் மகன் கருணாகரன் எப்படி காசுக்காகவும் பதவிக்காகவும் கடத்தல் பிளான் போட்டு ஜெயிக்கிறான் என்பதும், அதில் தாஸின் ரோல் என்ன என்பதுமே படத்தின் கதை.

    மாஸ் பிஜிஎம்

    மாஸ் பிஜிஎம்

    2012ம் ஆண்டு அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்த பெரிய புராஜெக்டாக அமைந்த படம் சூது கவ்வும். "காசு பணம் துட்டு மணி மணி", மாமா டவுசர் கழண்டுச்சு, கம்னா கம், எல்லாம் கடந்து போகுமடா என வெரைட்டி வெரைட்டியான பாடல்களை கொடுத்து அசத்தியிருப்பார். எல்லாத்தையும் விட விஜய்சேதுபதி வரும் இடங்களில் போடப்பட்டிருக்கும் மாஸ் பிஜிஎம் தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர் இடத்தை அவருக்கு பிடித்துக் கொடுத்தது.

    7 ஆண்டுகள்

    7 ஆண்டுகள்

    உழைப்பாளர்கள் தினமான மே தினத்தில் பல தமிழ் சினிமாக்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. கொரோனா பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தால், இன்றைய தினம் ஜெயம் ரவியின் பூமி மற்றும் தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகி இருக்கும். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு இதே நாளில் வெளியான சூது கவ்வும் படத்தை விஜய்சேதுபதி ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    சூது கவ்வும் 2

    சூது கவ்வும் 2

    சமீபத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்த தயாரிப்பாளர் சி.வி. குமார், சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயார் என்றும், இந்த ஊரடங்கு மற்றும் கொரோனா பிரச்சனைகள் முடிந்ததும் அறிவிப்புகள் வெளியாகும் என அறிவித்து இருந்தார். சூது கவ்வும் 2 படத்திலும் விஜய்சேதுபதியே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

    English summary
    Nalan Kumarasamy’s first debut movie with Vijaysethupathi starred Soodhu Kavvum movie completed of its 7 years of release. Vijaysethupathi fans create hashtag and celebrated it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X