அதிமுக தேர்தல் அறிக்கையை திமுகதான் காப்பியடித்துள்ளது! - செந்தில்

செல்லூர் 50 அடி ரோட்டில் அ.தி.மு.க., வடக்கு தொகுதி வேட்பாளர் போஸை ஆதரித்து நடிகர் செந்தில் பேசினார்.
அவர் கூறுகையில், "ஆண்டிபட்டி தொகுதியை அரசன்பட்டியாக மாற்றிக் காட்டியவர், ஜெயலலிதா. இப்போது சென்டிமென்டாக ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பது போன்ற பல திட்டங்களை அ.தி.மு.க., அறிவித்தது.
அதை அப்படியே, இந்த ஆண்டு தி.மு.க., காப்பியடித்துள்ளது. ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கருணாநிதி சொன்னார்... கொடுத்தாரா?
நம் வீட்டு பணத்தில் 'டிவி' கொடுத்துவிட்டு, அவர்கள் கொடுத்ததாக சொல்கிறார்கள்.
இப்போது சொன்னதையும் செய்தோம், சொல்லாததையும் செய்தோம், என கூறியது போல், சொல்லாமலே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பல கோடி ஊழல் செய்துள்ளனர்.
இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜா பலிகடா ஆக்கப்பட்டு, சிறையில் உள்ளார். இவர் ஊழல் செய்யவில்லை எனில், ஏன் கைது செய்யப்பட்டார்?
இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் எல்லாம் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. இதே நிலை தான் தமிழகத்திலும் ஏற்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications











