For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  8 மாத குழந்தையையும் பிக் பாஸ் பார்க்க வைத்த ஆரி.. கமல் பிரசாரத்திலும் எகிறிய கிரேஸ்.. வேற லெவல்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் யாருடனும் ஒட்டி வாழவில்லை என ஆரி பற்றி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் குறை சொன்னார்கள்.

  ஆனால், ஒருவர் கூட ஆரியை கூட சேர்த்துக் கொண்டு பேசி பழக வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை அதுதான் உண்மை.

  ஒவ்வொரு முறையும் ஆரிக்கு மக்கள் சப்போர்ட் இருப்பதை தெரிந்த பிறகும், ஆரியை இன்னும் ஒதுக்கி விட்டு அவரை வெளியேற்றவே துடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

  பிக் பாஸை திருத்திய ஆரி

  பிக் பாஸை திருத்திய ஆரி

  கடந்த மூன்று சீசன்களை போல, இந்த சீசனும் காதல், கவர்ச்சி என்கிற பழைய டிராக்கிலேயே சென்றிருக்கும். ஆனால், ஆரி அர்ஜுனன் ஒரு அண்ணனை போல இருந்து தவறை கண்டித்ததன் விளைவாகத்தான் பிக் பாஸ் குழுவினரே காதல் டிராக்குகளை குறைத்துக் கொண்டு பாலாவையும் ஷிவானியும் நிம்மதியாக விட்டனர் என்றே சொல்லலாம். ஆரி மேல அந்த ஒரு பயம் இருப்பது நல்லது தான்.

  8 மாத குழந்தை கூட

  அதனால் தான் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை 8 மாத குழந்தை முதல் 80 வயது பெரியவர்கள் வரை வீட்டில் குடும்பத்தினருடன் பார்த்து வருகின்றனர். பிக் பாஸே பார்க்க மாட்டேன்னு பல சீசன்களாக சொன்னவர்களை கூட ஆரியின் பேச்சு பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

  கோபத்திலும் நிதானம்

  தன்னை விட வயதில் சின்னப் பையனான பாலா பலமுறை எகிறி ஆரி பற்றி கோபத்தில் கண்ட வார்த்தைகளை போட்டு திட்டியும் ஆரி தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, அப்போதும் நிதானமாக தனது வாதத்தை எடுத்து வைப்பதாலே அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளார் என்கின்றனர். நேற்றைய எபிசோடில் கூட, பாலா "காரித்துப்பி" என்கிற கீழ்த்தரமான வார்த்தையை உபயோகித்த போதும் ஆரி கோபப்படவில்லை.

  கமல் பிரசாரத்தில் ஒலித்த குரல்

  ஆரி நீங்க தைரியமா வெளியே போகலாம் என பாலாவுக்கு சவுக்கடி கொடுத்து, ஆரியை கமல் கடந்த வாரம் பாராட்ட இது போன்ற நிகழ்வுகள் தான் காரணம். கமல் அரசியல் பிரசாரம் செய்ய செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரியின் பெயரை ஒலிக்கச் செய்து வருகின்றனர். ஆரிக்கு டைட்டில் கொடுக்கலைன்னா ஒட்டே போட மாட்டோம்னும் சில ஆரி வெறியர்களும் உள்ளனர். ஆனால், இது வெறும் நிகழ்ச்சி தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  பனியிலும் ஆரி

  நடிகர் ஆரிக்கு இந்தியாவை தாண்டியும் விஜய் டிவி ஒளிபரப்பாகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ஆரியின் ரசிகர் ஒருவர் பனி மலையில் உள்ள நீரோடையில் ஆரியின் பெயரை எழுதும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆரி ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

  ஆரியின் பி.ஆர். டீம்

  பப்ளிக் ரிலேஷன்ஷிப் எனும் பி.ஆர். என்கிற வார்த்தையே சமூக வலைதளத்தில் ‘அன்பு' வார்த்தை போல கொச்சையாகி விட்டது. ஆரி பயங்கரமாக பி.ஆர். டீமை வைத்து விளையாடுகிறார், பாலா, ரம்யா, ரியோ என அனைவரும் பி.ஆர். டீம் வைத்து விளையாடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆரியின் பி.ஆர். டீம் இதுதான் என ஒட்டுமொத்த பெரிய குடும்பமே ஆரியின் ஆர்மியனராக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

  ஆரி ஆந்தம்

  அலேகா டீசர், பகவான் மோஷன் போஸ்டர் என ஆரியின் சினிமா புரமோஷனும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியோடு சேர்ந்து களைகட்டுகிறது. இந்நிலையில், ஆரிக்கு தனியா ஒரு ஆந்தமே உருவாக்கி விட்டனர். இன்று மாலை 6 மணிக்கு ஆரியின் ஆந்தம் வெளியாகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை சனம் ஷெட்டி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  கப் தேவையில்லை

  கப் தேவையில்லை

  விஜய் டிவி எப்படியோ ஆரிக்கு பிக் பாஸ் தமிழ் 4 சீசன் டைட்டில் வின்னரை கொடுக்காது என்பது அவருக்கும் தெரியும், ரசிகர்களுக்கும் தெரியும். மேலும், அந்த கப் அவருக்கு தேவையில்லை, ரசிகர்களின் நெஞ்சில் கிடைத்துள்ள இடமே போதும் என ஆரியின் ஆர்மியினர் கொண்டாஇ வருகின்றனர். இந்த வாரம் ஆரி வெளியேறவில்லை என்றாலே அது அவருக்கான வெற்றி தான்!

  English summary
  8 months old infant fan for Aari and Kamal inspired by Aari fans shouted at political rally goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X