மாணவ மாணவியருக்கு ஒஸ்தி படக்குழு சார்பில் ரொக்கப்பரிசு
படத்தின் விளம்பரத்தை வித்தியாசமாக செய்வதில் இப்போதெல்லாம் முனைப்பு காட்டுகின்றனர் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.
குறிப்பாக இத்தகைய உத்திகள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
இந்த வகையில், சமீபத்தில் நடந்த பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளார், சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத் தயாரிப்பாளர்.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் (பாலாஜி ரியல் மீடியா) அறிவித்துள்ளார்.
மாநில அளவில் ப்ளஸ் டூவில் முதலிடம் பெற்ற ரேகா மலர்விழிக்கு ரூ 1 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நித்யா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ரம்யா (கோபிச்செட்டிப் பாளையம்), சங்கீதா (சேலம்), மின்னலாதேவி (செய்யார்), ஹரினி (பொன்னேரி) ஆகியோருக்கு தலா ரூ 20000 ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
ஜூன் 15-ம் தேதி நடக்கும் விழாவில் இந்த ரொக்கப் பரிசுகளை வழங்குகிறார் நடிகர் சிம்பு.


Click it and Unblock the Notifications











