8 தோட்டாக்கள் இயக்குநர் அடுத்து அஜித் படத்தை இயக்கப் போகிறாரா... ஶ்ரீ கணேஷின் நச் பதில்
சென்னை: எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் குருதி ஆட்டம்
2017-இல் அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கோவிட் காரணமாகவும் சட்ட ரீதியான பிரச்சனை காரணமாகவும் தாமதமாகி கடந்த வாரம் தான் வெளியானது.
எட்டு தோட்டாக்கள் போல் அல்லாமல் இந்த படம் சற்று பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றுள்ளது.

மிஷ்கின் சிஷ்யன்
இயக்குநர் மிஷ்கின் தனது படங்களை அணுகும் முறையை பார்த்து அதில் ஈர்ப்படைந்து அவரிடம் துணை இயக்குநராக சேர்ந்தவர் தான் ஸ்ரீ கணேஷ். விமர்சன ரீதியாக மிகவும் கொண்டாடப்பட்ட ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் பின்னர் தனியாக படம் பண்ண முயற்சித்து வந்தார்.

வெற்றியின் அறிமுகம்
அறிமுக கதாநாயகன் வெற்றி தயாரித்து அந்த படத்தில் நடிக்க முன் வரவே அவரை வைத்து எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தை எடுத்தார் ஸ்ரீ கணேஷ். ஜப்பானிய திரைப்படமான ஸ்ட்ரே டாக் திரைப்படத்தின் தழுவல் தான் 8 தோட்டாக்கள். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் அதனை கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமிக்கும் செய்தனர்.

குருதி ஆட்டம்
அதன் பின்னர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கரை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் இசையின் உரிமையை வாங்கியது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அந்த அறிமுகத்தின் அடிப்படையில் குருதி ஆட்டம் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். 8 தோட்டாக்கள் வெற்றிp படம் என்பதால் குருதி ஆட்டம் திரைப்படத்திற்கு நீண்ட நாட்களாகவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று இப்போது விமர்சனமும் எழுந்துள்ளது.
Recommended Video


அஜித்திற்கு கதை
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக குருதி ஆட்டம் திரைப்படத்தில் மட்டுமே பணிபுரிந்த ஸ்ரீ கணேஷ் இடையில் நடிகர் அஜித்திற்கும் கதை கூறியதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் குருதி ஆட்டம் திரைப்படம் சம்பந்தமான பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்திற்கு கதை கூறினீர்களா, அடுத்து நீங்கள் இயக்கம் படத்தில் அவர்தான் நடிக்கிறாரா என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. தான் அதற்கு பதில் சொல்வது நியாயமாக இருக்காது என்றும் நடிகர் அஜித் தரப்பில் தான் எந்த ஒரு அறிவிப்பும் வரும் என்றும் கடவுள் புண்ணியம் இருந்தால் கண்டிப்பாக அறிவிப்பு வரும் என்றும் ஸ்ரீ கணேஷ் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











