'விஜய் 62' படத்தில் 8 தேசிய விருது வாங்கிய எடிட்டர்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
விஜய் - முருகதாஸ் கூட்டணி, 'கத்தி', 'துப்பாக்கி' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 8 தேசிய விருதுகள் வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் விஜய்யின் 62-வது படத்தில் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்
விஜய் 62 படத்துக்கு படத்தொகுப்பாளராக 8 முறை தேசிய விருது வாங்கிய எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் ஏற்கெனவே விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்த 'கத்தி' மற்றும் 'துப்பாக்கி' ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.

கிரிஷ் கங்காதரன்
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் 'சோலோ', 'அங்கமாலி டைரிஸ்' மற்றும் 'கலி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவின் மூலம் பிரபலமானவர் கிரிஷ் கங்காதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபு
விஜய் 62 படத்தில் காமெடியனாக 'மெர்சல்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த யோகிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் ஷூட்டிங்
தளபதி 62 படத்தின் ஷூட்டிங் 2018 ஜனவரி மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. அப்போதுதான் அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











