“வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ எட்டு வயதாச்சு…நெகிழ்ந்த இயக்குனர்!
சென்னை : வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
காதல் மற்றும் காமெடி திரைப்படமான இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பிளாக் பாஸ்டர் ஹிட்டடித்தது.
இதனை ரசிகர்கள் #8YearsofVaruthapadathaValibarSangam என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டாகி வருகிறது.

8ஆண்டுகள் நிறைவு
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் போஸ் பாண்டியாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படம் ரிலீஸாகி இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போஸ் பாண்டியை பற்றி தான் ட்விட்டரில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #8YearsofVaruthapadathaValibarSangam என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டாகி வருகிறது.

திருப்புமுனை
சிவகார்த்திகேயனுக்கு திருப்பு முறையை ஏற்படுத்தி படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். காதல் மற்றும் காமெடி திரைப்படமான இப்படத்தில் சிவகார்த்திகேயன் சூரி இருவரின் காமெடி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. மேலும், சூரிக்கு கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வாய்ப்பு. இப்படத்தில், உடல் மொழியால் ரசிகர்களை ஈர்க்க வைத்திருப்பார் சூரி.

சத்யராஜ் கலக்கினார்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடித்து முடிக்கும் சத்யராஜிக்கு மேலும் சபாஷ்களை சொல்ல வைத்துள்ளது. இத்திரைப்படத்தில், சத்யராஜ் அல்லக்கைகளால் அவதிப்படும் காட்சியும் குறிப்பாக துப்பாக்கி காணும் என்று தேடும்காட்சி அபாரம். மேலும்,சத்யராஜின் அல்லக்கைகளாக வரும் நால்வருமே கலகலக்கலாக நடித்திருப்பார்கள்.

ஊதா கலரு ரிப்பன்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில், இடம் பெற்ற பார்க்காதே... பார்க்காதே பாலும், ஊதா கலரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரிலீஸானபோது திரும்பும் பக்கம் எல்லாம் ஊதா கலரு ரிப்பன் பாடல் தான் ஒலித்தது. ஸ்ரீதிவ்யாவை ரசிகர்கள் ஊதா கலரு ரிப்பன் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அந்த அளவுக்கு அந்த பாடல் ஹிட்டானது.

அனைவருக்கும் நன்றி
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், VVS க்கு எட்டு வயதாகிறது என்று இன்னும் நம்ப முடியவில்லை... நினைவுகள் எப்போதும் புதியதாக இருக்கும் ... உங்களின் ஆதரவுக்கு பார்வையாளர்களுக்கு நன்றி என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று அதில் பதிவிட்டுள்ளார்

சலிக்காத படம்
இப்படத்தில்தீவிரரசிகர் ஒருவர் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் என்றும், முதல் நாளே இரண்டு முறை பார்த்த திரைப்படம் என்றும் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











